கன்னாபின்னானு காதல் செய்யும் பாம்புகள்: இணையத்தை கலக்கும் 'ஸ்னேக் லவ்'

Snake Love Video: சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் பாம்புகளின் காதல் காணக்கிடைக்கிறது. இதில் காணப்படும் காட்சிகளை நாம் அவ்வளவு எளிதாக பார்த்து விட முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 9, 2022, 12:49 PM IST
  • பின்னிப்பிணைந்து காதல் செய்யும் பாம்புகள்.
  • கேமராவில் கைதான அன்பும் பாசமும்.
  • வைரலான வீடியோ!!
கன்னாபின்னானு காதல் செய்யும் பாம்புகள்: இணையத்தை கலக்கும் 'ஸ்னேக் லவ்' title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. பாம்புகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் பாம்புகளின் காதல் காணக்கிடைக்கிறது. இதில் காணப்படும் காட்சிகளை நாம் அவ்வளவு எளிதாக பார்த்து விட முடியாது. இவை மிகவும் அரிதான காட்சிகளாகும். வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்து மக்களும் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். பொதுவாக பாம்புகளுக்கு இடையிலான சண்டை காட்சிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், காதல் காட்சிகள் மிக அரிதாகவே காணக்கிடைக்கின்றன. தற்போது வெளிவந்துள்ள வீடியோவில், நதிக்கரையில் ஒரு ஜோடி பாம்பு ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காதலில் உலகையே மறந்துவிடுவதை காண முடிகின்றது. இந்த வீடியொ ஒரு கிராமப்புறத்தைச் சேர்ந்தது போல் தெரிகிறது. 

மேலும் படிக்க | காதுக்குள் புகுந்த பாம்பு! மயிரிழையில் உயிர் தப்பிய பெண்: வீடியோ வைரல் 

பாம்புகளின் காதல்

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், நதிக்கரையில் இரு பாம்புகள் ஒருவர் மீது ஒருவர் அன்பை பொழிவதை காண முடிகின்றது. இந்த அட்டகாசமான அரிய காட்சியை யாரோ கேமராவில் படம் பிடித்து வைரலாக்கியுள்ளனர். சுமார் ஒன்றரை நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ, சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் அதிகம் பார்க்கப்படுகிறது. இரு பாம்புகளின் அழகான காதலை வீடியோவில் பார்ப்பது மிகவும் அருமையாக உள்ளது. 

பின்னிப்பிணைந்து காதல் செய்யும் பாம்புகளின் வீடியோவை இங்கே காணலாம்: 

இப்படி ஒரு அரிய காட்சியை பார்த்திருக்க முடியாது

ஆண் நாகம் சில சமயங்களில் காற்றில் பல அடிகள் மேல் நோக்கி பாய்வதை வீடியோவில் காண முடிகின்றது. அதைப் பார்த்த பெண் நாகமும் அதையே செய்யத் தொடங்குகிறது. வீடியோவின் பின்னணியில் இசையும் கேட்கிறது. காதல் செய்யும் போது, இரு ​​பாம்புகளும் ஒன்றோடு ஒன்று கட்டித் தழுவி அன்பை பரிமாறிக்கொள்வதை காண முடிகின்றது. இந்த வீடியோ யூடியூப்பில் Desi Dhamal என்ற கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | ஆட்டுக்குட்டிக்கு சண்டை; பாம்பை வம்புக்கு இழுக்கும் கழுதைப்புலி- வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News