Viral Video: பாம்பை ரவுண்டு கட்டி குத்தி குதறும் காகங்கள்... மனம் பதற வைக்கும் வீடியோ!

சமூக வலைதளங்களில் மக்களை வியப்பில் ஆழ்த்தும் அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அல்லது ஆச்சரியப்படுத்தும் பல தகவல்களை காணலாம்.  விலங்குகள் குறிப்பாக பாம்புகள் தாக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் கவனம் பெற்று வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 18, 2023, 05:50 PM IST
  • நாகப்பாம்புகள் மற்றும் பாம்புகள் மிகவும் ஆபத்தான ஊர்வன.
  • பாம்பு வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
  • பறவைகள் கூட்டமாக வந்து பாம்பை தாக்கும் காணொளி.
Viral Video: பாம்பை ரவுண்டு கட்டி குத்தி குதறும் காகங்கள்... மனம் பதற வைக்கும் வீடியோ! title=

சமூக வலைதளங்களில் மக்களை வியப்பில் ஆழ்த்தும் அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அல்லது ஆச்சரியப்படுத்தும் பல தகவல்களை காணலாம்.  விலங்குகள் குறிப்பாக பாம்புகள் தாக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் கவனம் பெற்று வருகிறது. இந்த வீடியோக்களில் சில நம்பவே முடியாததாக இருக்கும். சமூக ஊடகங்களில் கவனம் பெறும் சில வீடியோக்கள் மக்களை சிரிக்க வைக்கின்றன, ஆனால், சில வீடியோக்கள் நம்மை அழவும், சோகமாகவும், ஆச்சரியமாகவும் ஆக்குகின்றன. விலங்கு வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும் பாம்பு வீடியோக்கள் அதிக கவனம் பெறுகின்றன. தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாகப்பாம்புகள் மற்றும் பாம்புகள் மிகவும் ஆபத்தான ஊர்வன வகை விலங்குகள் என்றால் மிகையில்லை. அதனால்தான் பாம்பு வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு காணொளி இது. பாம்புகளின் முட்டைகள் 55 முதல் 60 நாட்களில் குஞ்சு பொரிக்கும். பாம்புகள் 2 முதல் 4 ஆண்டுகளில் முழு முதிர்ச்சியை அடைகின்றன. பாம்புகள் வருடத்திற்கு 4 முதல் 12 முறை சருமத்தை உதிர்கின்றன. இது எக்டிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. பாம்புகள் சருமத்தை உதிர்ப்பதற்குக் காரணம் பாம்பின் உடல் வளர வளர செதில்கள் வளராமல் இருப்பதுதான். பாம்புகள் எலிகள், அணில் மற்றும் பறவைகளை உண்ணும். ஆனால் பறவைகள் பாம்பை தாக்குவதை உங்களால் பார்க்க முடியாது. தற்போது பறவைகள் கூட்டமாக வந்து பாம்பை தாக்கும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பறவைகள் கூட்டமாக பாம்பை குத்தி குதறும் வீடியோவை இங்கே காணலாம்:

பாம்புகள் என்றாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். ஆனால் இங்கே பறவைகள் பாம்பை புரட்டி எடுக்கின்றன. கோபமான இந்த பறவைகளின் தாக்குதலை தாக்குப்படிக்க முடியாமல், பாம்பு திணறுவதைக் காணலாம். இது Roaring Earth Facebook கணக்கின் மூலம் பகிரப்பட்ட காணொளி. இது தென்னாப்பிரிக்காவில் உள்ள டினோகெங் கேம் ரிசர்வ்  காடுகளில் எடுக்கப்பட்ட வீடியோ. மிகவும் ஆபத்தான பூம்ஸ்லாங் வகையைச் சேர்ந்த பாம்பை பறவைகள் குழு ஒன்று தாக்கும் வீடியோ இது. இந்த வீடியோவை ஏற்கனவே 62000 பேர் பார்த்துள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News