சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் சண்டை: அங்க ஒரு ட்விஸ்ட், வைரல் வீடியோ

Scary Animal Video: இப்படி ஒரு சண்டையா என வியக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு இணையவாசிகள் பல கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 24, 2022, 12:40 PM IST
  • விலங்குகளுக்குள்ளும் பல சுவாரசியங்கள் உள்ளன.
  • சிங்கங்கள் இரை தேடுவதில் மிக மும்முரமாக இருக்கும் அதே நேரம், குரங்குகள் போன்ற விலங்குகள் குறும்பு செய்வதில் மும்முரமாக இருக்கும்.
  • தற்போது மீண்டும் ஒரு சிங்கத்தின் வீடியொ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் சண்டை: அங்க ஒரு ட்விஸ்ட், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

விலங்குகளுக்குள்ளும் பல சுவாரசியங்கள் உள்ளன. சிங்கங்கள் இரை தேடுவதில் மிக மும்முரமாக இருக்கும் அதே நேரம், குரங்குகள் போன்ற விலங்குகள் குறும்பு செய்வதில் மும்முரமாக இருக்கும். தற்போது மீண்டும் ஒரு சிங்கத்தின் வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் இரை தேடி அலையும் சிங்கம் ஒன்று தூங்கிக் கொண்டிருந்த சிறுத்தையின் அருகில் செல்வதை காண முடிகின்றது. பின்னர் நடப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக உள்ளது. 

சிங்கம் மற்றும் சிறுத்தையின் சண்டை

இந்த வைரல் வீடியோவிலும், காட்டின் ராஜாவான சிங்கம் இரை தேடி அங்கும் இங்கும் அலைவதையும், அப்போது தூங்கிக் கொண்டிருந்த சிறுத்தையின் மீது அதன் கண்கள் படுவதையும் கான்கிறோம். சிறுத்தையை கண்ட சிங்கம், மிக மெதுவாக ரகசியமாக அதை அடைகிறது. ஆனால், சிங்கம் சிறுத்தையின் அருகில் செல்வதற்கு முன்பே சிறுத்தை விழித்துக்கொள்கிறது. இரு மிருகங்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடக்கின்றது.

முதலில் ஒரு குழியிலிருந்து பாய்ந்து சிங்கம் சிறுத்தையிம் அருகில் செல்கிறது. ஆனால், சத்தம் கேட்டு விழிகும் சிறுத்தை சிங்கத்திடன் சண்டையிட்ட படியே அதே குழிக்குள் விழுந்து தப்பித்து விடுகிறது. இரை தேடி வந்த சிங்கம், ஏமாந்து நிற்பதை வீடியோவின் முடிவில் காண முடிகின்றது. 

சிங்கம் மற்றும் சிறுத்தையின் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

(@feline.unity)

இது வரை சிங்கமும் சிறுத்தையும் மற்ற விலங்குகளை வேட்டையாடும் பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், சிங்கமும் சிறுத்தையும் சண்டையிட்டுக்கொள்ளும் இந்த வீடியோ மிகவும் அரிதானது. இந்த வீடியோ feline.unity என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து  வருகிறார்கள். 

மேலும் படிக்க | சூப்பராக பாத்திரம் தேய்க்கும் குரங்கு: கொஞ்சித் தீர்க்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News