cyber attack on Prithviraj: 'Save Lakshadweep' பிரசாரத்திற்கு குவியும் நடிகர்களின் ஆதரவு

 ‘#SaveLakshadweep’ என்ற சமூக ஊடக பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் பிருத்விராஜுக்கு குவியும் ஆதரவும், அதன் பின்னணியில் உள்ள அரசியல் வண்ணமும்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 28, 2021, 10:15 AM IST
  • 'Save Lakshadweep' பிரசாரத்திற்கு குவியும் நடிகர்களின் ஆதரவு
  • நடிகர் பிருத்விராஜ் ஆதரவு தெரிவித்தார்
  • பிருத்விராஜுக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது
cyber attack on Prithviraj: 'Save Lakshadweep' பிரசாரத்திற்கு குவியும் நடிகர்களின் ஆதரவு  title=

லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவு கொடுத்ததற்காக சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ருக்கிறார் பிரபல நடிகர் பிருத்விராஜ். லட்சத்தீவுகளில் முன்மொழியப்பட்ட சர்ச்சைக்குரிய விதிமுறைகளுக்கு எதிராக,  லட்சத்தீவில் வசிக்கும் மக்கள் ‘#SaveLakshadweep’ என்ற சமூக ஊடக பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்.

அந்த பிரசாரத்தில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகர் பிருத்விராஜ், மே 24 அன்று லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக ஒரு பேஸ்புக் பதிவை எழுதினார். அதுதான் அவருக்கு சிக்கலானது.

தனது பேஸ்புக் பதிவில் லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்த அவர், லட்சத்தீவு தீவுகளின் நிர்வாகி பிரபுல் படேல் (Praful Patel)  முன்மொழிந்த சர்ச்சைக்குரிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.   

Also Read | கொரோனாவை கட்டுப்படுத்துமா கத்திரிக்காய் சொட்டு மருந்து?

இப்படி பிரச்சனைகளை ஏற்படுத்தும் அந்த சர்ச்சைக்குரிய விதிமுறைகள் என்ன தெரியுமா? அந்த பகுதியில் வசிக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது. அதோடு தங்களுக்கு தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்தவும் மக்களை வெளியேற்றவும் நிர்வாகத்திற்கு அதிகாரத்தை அளிக்கும் விதிமுறைகளும் அமல்படுத்தப்படும்.

இவற்றைத் தவிர, லட்சத்தீவில் உள்ள பள்ளிகள், தங்கள் உணவுவிடுதிகளில் அசைவ உணவை தயாரிக்கவோ, மாணவர்களுக்கு வழங்கவோக் கூடாது. மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள  உள்ளூர் மக்களின் கொட்டகைகள் அழிக்கப்படும்.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பிருத்விராஜ், நடிகர் கீது மோகன்தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தாங்களாகவே முன்வந்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

Also Read | ஆன்லைன் வகுப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவுகள்!

மக்களின் வாழ்க்கை முறையை சீர்குலைப்பதை ‘முன்னேற்றம்’என்ற பெயரில் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்வியை பிருத்விராஜ் தனது பேஸ்புக் பதிவில் எழுப்பினார். 

“எனக்குத் தெரிந்த வகையில், இந்த புதிய விதிமுறைகளில் லட்சத்தீவுகளில் வசிப்பவர்களுக்கு பெருத்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எந்தவொரு சட்டமும், சீர்திருத்தமும் அல்லது திருத்தமும் ஒருபோதும் நிலத்திற்காக இருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். பல நூற்றாண்டுகள் பழமையான அமைதியாக வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கை முறையை சீர்குலைப்பது எவ்வாறு முன்னேற்றத்திற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையாக மாறும்? சாத்தியமான விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் மிகவும் நுட்பமான தீவு சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையை அச்சுறுத்துவது நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்குமா? ” என்று பிருத்விராஜ் தனது சமூக ஊடகப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு எதிர்வினையாற்றிய பாஜக தேசிய துணைத் தலைவர் ஏ.பி. அப்துல்லக்குட்டி (BJP national vice-president A P Abdullakutty)  பிரித்விராஜின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினார்.

Also Read | தமிழகத்தில் 3000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 படுக்கைகளை நிறுவும் Engg & Infra firms

கேரளாவில் வசிக்கும் நடிகர் பிருத்விராஜ், லட்சத்தீவைப் பற்றிய போலி கதைகளை புனைவதாக குற்றம் சாட்டினார். அசைவ உணவுப் பள்ளிகளில் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தீவின் வளர்ச்சி தான் பாஜகவின் இலக்கு என்றும் கூறினார்.

அதன்பிறகு, 'பிருத்விராஜ் மீண்டும் ஜிஹாதிகளுக்காக அழுகிறார்' என்ற தலைப்பில்  பாஜக சார்பு மலையாள செய்தி சேனல் ஒன்று ஆன்லைன் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதை தங்கள் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது.

இதையடுத்து, பிருத்விராஜுக்கு ஆதரவாக, நடிகர்கள், சமூக ஆர்வலர்களும் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். தற்போது சமூக ஊடகங்களில் ‘#SaveLakshadweep’ என்ற ஹேஷ்டேக் பிரபலமாகிவருகிறது. 

இதையடுத்து, அந்த தனியார் தொலைகாட்சி, தனது ஆன்லைன் கட்டுரையை சமூக வலதளத்தில் இருந்து நீக்கிவிட்டது.

Also Read | 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்: முதல்வர் ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News