இணையத்தை கலக்கும் சர்கார் விஜய்-ன் புதிய புகைப்படம் -Seepic!

ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய்-ன் சர்கார் படத்தின் புதிய புகைப்படம் இணையத்தில் விரலாக பரவிவருகிறது!!

Last Updated : Jul 10, 2018, 03:14 PM IST
இணையத்தை கலக்கும் சர்கார் விஜய்-ன் புதிய புகைப்படம் -Seepic!  title=

ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய்-ன் சர்கார் படத்தின் புதிய புகைப்படம் இணையத்தில் விரலாக பரவிவருகிறது!!

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி கோலிவுட் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இப்படத்தின் படபிடிப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் சர்கார். இதில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், படத்தில் நடித்துவரும் நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் விஜய் புகைப்படத்தை பதிவிட அனுமதி வழங்கிய ஏ.ஆர். முருகதாஸிற்கு நன்றி தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியிடப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Trending News