ரஹானே-வுக்கு கிடைத்த புதிய பதவி; வாழ்த்திய டெண்டுல்கர்!

அஜின்கியா ரஹானே மற்றும் அவரது மனைவி ராதிகா தோபாவ்கர் ஆகியோர் சமீபத்தில் தங்கள் வீட்டிற்கு புதியவரை வரவேற்றனர். இந்நிலையில் இந்த ஜோடி தங்கள் குழந்தையின் படத்தை தற்போது சமூக ஊடக தளத்தில் பகிர்ந்து கொண்டனர்.

Last Updated : Oct 8, 2019, 07:11 AM IST
ரஹானே-வுக்கு கிடைத்த புதிய பதவி; வாழ்த்திய டெண்டுல்கர்! title=

அஜின்கியா ரஹானே மற்றும் அவரது மனைவி ராதிகா தோபாவ்கர் ஆகியோர் சமீபத்தில் தங்கள் வீட்டிற்கு புதியவரை வரவேற்றனர். இந்நிலையில் இந்த ஜோடி தங்கள் குழந்தையின் படத்தை தற்போது சமூக ஊடக தளத்தில் பகிர்ந்து கொண்டனர்.

தம்பதியின் வாழ்க்கையின் அடுத்த படியினை பாராட்டும் விதமாக, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் வாயிலாக வாழ்த்தியுள்ளார். மேலும் பெருமைமிக்க பெற்றோர்களுக்கான ஆலோசனையின் ஒரு பகுதியாய், குறிப்பு ஒன்றினையும் தந்துள்ளார். 

சச்சின் மற்றும் ரஹானே இருவரும் தேசிய அணியில் சில சிறந்த தருணங்களைப் பகிர்ந்து கொண்டவர்கள். மேலும் அவர்கள் தங்கள் மாநில அணியான மும்பைக்கு அணித் தோழர்களாக இருந்துள்ளனர். ரஹானே கிரிக்கெட்டை சிறந்த முறையில் வணங்குகிறார், மேலும் தனது முன்னேற்றத்திற்கு அவ்வப்போது ஜாம்பவானின் வழிகாட்டுதல்களையும் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது இரண்டு அற்புதமான குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் சச்சினிடமிருந்து பெற்றோருக்குரிய சில மதிப்புமிக்க பரிந்துரைகளையும் ரஹானே பெற்றுள்ளார்.

ரஹானே-வின் தந்தை என்னும் புதிய பதவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சச்சின் குறிப்பிடுகையில்.,  “பல வாழ்த்துக்கள், ராதிகா மற்றும் அஜிங்க்யா. உங்கள் முதல் குழந்தைக்கு பெற்றோராக இருப்பதன் மகிழ்ச்சி ஈடு இணையற்றது. இதனிடையே டயப்பர்களை மாற்றும் ஒரு இரவு காவலாளியின் புதிய பாத்திரத்தை ஏற்க இருக்கும் ரஹானேவிற்கு எனது வாழ்த்துக்கள்” என மாஸ்டர் பிளாஸ்டர் கலாய்த்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள ரஹானே., "மிக்க நன்றி பாஜி., புதிய பதவியில் சிறப்பாக செயல்பட சில துணுக்குகளை பெற, விரைவில் உங்களை சந்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ரஹானே தனது குழந்தை பருவ நண்பரான ராதிகாவை 2014-இல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி ஜூலை மாத தொடக்கத்தில் - கர்ப்ப செய்திகளை அறிவித்தது மற்றும் சில படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டது. இந்நிலையில் சமீபத்தில் இந்த ஜோடி ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த செய்தினை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டனர்.

Trending News