சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானின் Fitness Challenge Video!

சன் ரைசஸ் ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், சக வீரர் சித்தார்த் கவுல்-ன் #FitnessChallenge சவாலை ஏற்று வீடியோ பதிவு செய்துள்ளார்!

Last Updated : Jun 24, 2018, 07:32 PM IST
சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானின் Fitness Challenge Video! title=

சன் ரைசஸ் ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், சக வீரர் சித்தார்த் கவுல்-ன் #FitnessChallenge சவாலை ஏற்று வீடியோ பதிவு செய்துள்ளார்!

சமீபத்தில் நடைப்பெற்ற IPL 2018 தொடரில் சன் ரைசஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர் 17 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை குவித்தார். பல ஆட்டங்களில் அணியின் வெற்றிக்கு பக்க பலமாய் இருந்தார். ஆப்கானிஸ்தான் நாட்டு வீரரான இவருக்கு இந்தியாவில் தனி ரசிகர் கூட்டமே உறுவானது. 

தற்போது இந்தியா விளையாட்டு துறை அமைச்சர் ராஜுயவர்த சிங் ரத்தோர் ஆரம்பித்து வைத்த #FitnessChallenge சவாலில் பிரதமர் மோடி, விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டு தங்களது உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஐதராபாத் அணியின் வீரர் சித்தார்த் கவுல் சக வீரரான ரஷித் கானுக்கு சவால் விடுத்தார். இந்த சவாலினை ஏற்றுக்கொண்ட ரஷித் கான் தனது உடற்பயிற்சி வீடியோவினை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!

Trending News