பாட்டு பாடும் பாறை: தட்டினால் ஒலி கேட்கும் அதிசயம்...வைரலாகும் வீடியோ

Rare Viral Video: பாறைகள் பேசுமா? அது தெரியாது.... ஆனால், பாறைகள் கண்டிப்பாக இனிமையான ஒலியை எழுப்பும். பாறைகளிலிருந்து இனிமையான ஒலி வரும் அதிசய வீடியோவை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 12, 2023, 12:22 PM IST
  • இயற்கை என்பது மனித குலத்துக்கு கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதம்.
  • இயற்கையின் பல ரகசியங்கள் இன்னும் மனிதனுக்கு எட்டாத விஷயங்களாகவே உள்ளன.
  • இயற்கையின் பல அற்புதங்களுக்கு பின்னால் உள்ள சூட்சுமங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
பாட்டு பாடும் பாறை: தட்டினால் ஒலி கேட்கும் அதிசயம்...வைரலாகும் வீடியோ  title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

இயற்கையின் அதிசயங்கள்

இயற்கை என்பது மனித குலத்துக்கு கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதம். இயற்கையின் பல ரகசியங்கள் இன்னும் மனிதனுக்கு எட்டாத விஷயங்களாகவே உள்ளன. இயற்கையின் பல அற்புதங்களுக்கு பின்னால் உள்ள சூட்சுமங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இயற்கையின் பல அதிசயங்களின் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்படுகின்றன. அப்படி புரிந்துகொள்ள முடியாத ஒரு அதிசயத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஒலி எழுப்பும் பாறைகள் (ரிங்கிங் ராக்)

பென்சில்வேனியாவில் ரிங்கிங் ராக்ஸ் கவுண்டி பார்க் என்ற ஒரு இடம் உள்ளது. முதலில், இந்த நிலம் 1737 ஆம் ஆண்டு பிரபலமாக இருந்த வாக்கிங் பர்சேஸ் மூலம் பென் குடும்பத்தால் கையகப்படுத்தப்பட்டது. 1895 ஆம் ஆண்டு இந்த இடத்தை ஹேரிங் என்பவர் வாங்கினார். இந்த இடத்தில் இருக்கும் பாறைகளில் புதைந்து கிடக்கும் அதிசயத்தை உணர்ந்த அவர் இவற்றை பாதுகாக்க உருதி பூண்டார். பல கல் குவாரி நிறுவனங்கள் இந்த இடத்துக்கு விலை பேசிய போதும் அவை அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆகஸ்ட் 22, 1918 இல், ஹேரிங் இந்த இடத்தை பக்ஸ் கவுண்டி வரலாற்று சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 

தற்போது ரிங்கிங் ராக்ஸ் பார்க் என்று அழைக்கப்படும் இந்த பாறை மைதானம் 7 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் நிறைந்த பகுதியாகவும், 10 அடிக்கு மேல் பாறாங்கற்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியாகவும் உள்ளது.

அதிசயிக்கும் ரிங்கிங் ராக்கின் வீடியோவை இங்கே காணலாம்:

மேலும் படிக்க | 'திடீரென அசைந்த மலை' இணையத்தில் பரவும் வீடியோ வைரல்

பாறைகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சப்தங்களை எழுப்பும். நீண்ட காலமாக பாறைகளிலிருந்து ஒலி எப்படி வருகிறதென்பது புரியாத புதிராகவே இருந்தது. இருப்பினும், 1965 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் குழு ஒன்று பாறைகளை உடைத்து, வெட்டி ஆராய்ச்சி செய்தது. பல சோதனைகளுக்குப் பிறகு, அங்குள்ள அனைத்து பாறைகளும் உண்மையில் ஒலி எழுப்புகின்றன என்பதும், ஆனால், சில பாறைகள் எழுப்பும் ஒலி பெரும்பாலும் மனித காது உணரக்கூடியதை விட குறைவான தொனியில் இருக்கிறது என்பதும் தெரிய வந்தது. இருப்பினும், இந்த பாறைகளில் இருந்து எப்படி ஒலி வருகிறது என்பதற்கான சரியான வழிமுறை இன்னும் புரியாமல் தான் உள்ளது.

இந்த ஒலி எழுப்பும் பாறைகளில் ஒரு பகுதியை பிற்காலப் பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக கைப்பற்ற பலர் ஆசைப்பட்டாலும், முயற்சித்தாலும், அந்த முயற்சியாலும் ஆசையாலும் எந்த பலனும் இல்லை. ஏனென்றால் ஒன்றொக்குன்று அருகில் இருக்கும் இந்த பாறைக் கூட்டத்திலிருந்து ஒரு பாறையை மட்டும் தனியாக எடுத்தால், அவை அவற்றின் இசைத் திறனை இழக்கின்றன. 

மக்கள் ஆர்வமாக ரிங்கிங் ராக் பூங்காவிற்கு சென்று, பாறைகளை தட்டி அவை எழுப்பும் ஒலியை கேட்டு ரசிக்கிறார்கள். இந்த ஒலி எழுப்பும் பாறைகள் பற்றி தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இணையவாசிகளும் இதை பற்றி ஆர்வமாக தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் படிக்க | 'மரத்தில் இருந்து திடீரென கொட்டும் தண்ணீர்' இணையத்தில் பரவும் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News