நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் உச்சகட்டத்தை அடைந்திருந்த சமயத்தில், திடீரென அரசியல் கருத்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் சமயத்தில் அவர் அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று பரவலாக பேசப்பட்டுவருகிறது.
இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ரசிகர்களுடனான சந்திப்பின் கடைசி நாளான இன்று ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார்.
அதன்படி, நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாதாததால் போட்டியிடவில்லை என்று கூறியிருந்தார்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பலரும் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக...’ என்று பதிவு செய்திருக்கிறார்.
சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக
— Kamal Haasan (@ikamalhaasan) December 31, 2017
I congratulate my brother Rajini for his social consciousness and his political entry. Welcome welcome: Kamal Haasan on #Rajinikanth (file pic) pic.twitter.com/s2nJs4yi8E
— ANI (@ANI) December 31, 2017