1 மாதத்திற்கு TV விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை: காங்.,

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் ஒரு மாதத்திற்கு டிவி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டம்!!

Last Updated : May 30, 2019, 09:57 AM IST
1 மாதத்திற்கு TV விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை: காங்.,  title=

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் ஒரு மாதத்திற்கு டிவி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டம்!!

மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தை தொடர்ந்து, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்தார். அவர் பதவி விலகக் கூடாது நாடு முழுவதும் அக்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், “ எங்கள் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களை எந்த தொலைக்காட்சிக்கு நிகழ்ச்சியிலும் ஒரு மாதத்திற்கு பங்கு பெறக்கூடாது காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அனைத்து செய்தி சேனல்கள் அல்லது செய்தி ஆசிரியர்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சியினரை அழைக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலகுவாரா அல்லது தொடர்வாரா என்பதில் அக்கட்சியில் குழப்பம் நீடிப்பதால், காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே சில எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் பதவி விலகக்கூடாது வலியுறுத்திய நிலையில் நாளை நடைபெற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ராகுல் பதவியில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

 

Trending News