சாம்பியன் பட்டம் வென்ற PV சிந்து-க்கு தலைவர்கள் வாழ்த்து!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ள PV சிந்து-க்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்!

Last Updated : Aug 25, 2019, 09:19 PM IST
சாம்பியன் பட்டம் வென்ற PV சிந்து-க்கு தலைவர்கள் வாழ்த்து! title=

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ள PV சிந்து-க்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்!

சுவிட்சர்லாந்து மான்சென்ஸ்டீன் நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட்களில் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார்.

இந்நிலையில்,  உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

பி.வி.சிந்து தங்கம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது. பி.வி. சிந்துவின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி கோடிக் கணக்கானவர்களை கவர்ந்துள்ளது. இனி  வருங்கால போட்டிகளில் வெற்றி பெற அவரை வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வாழ்த்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது., இந்தியாவை மீண்டும் பெருமை கொள்ளச் செய்திருக்கும் பி.வி.சிந்துவிற்கு வாழ்த்துகள்.  பி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளார். பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என பதிவிட்டுள்ளார்.

மு.க .ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கும்.அவர் வரும்காலங்களில் பல வெற்றிகளை பெற நான் வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Trending News