சிறுமியின் புஷ்பா ஹூக் ஸ்டெப்! வைரலாகும் வீடியோ!

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் அனைவரும் நடனமாடி அதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 4, 2022, 10:52 AM IST
  • புஷ்பா பாடல்களுக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடனமாடி அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
  • சமீபத்தில் கூட விமான பணிப்பெண் ஒருவர் 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தது.
சிறுமியின் புஷ்பா ஹூக் ஸ்டெப்! வைரலாகும் வீடியோ! title=

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா'.  இப்படம் திரைக்கு வந்து பல நாட்கள் ஆனபோதிலும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் யாவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டது.  இப்படத்திலுள்ள 'ஊ சொல்றியா மாமா, சாமி சாமி, ஸ்ரீவல்லி' போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமானது.  இந்த பாடல்களுக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடனமாடி அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர், இதனை பலரும் சேலஞ்சாக எடுத்துக்கொண்டு நடனமாடி வருகின்றனர்.  சமீபத்தில் கூட விமான பணிப்பெண் ஒருவர் 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தது.  அந்த வகையில் தற்போது 'புஷ்பா' பட பாடலுக்கு நடனமாடும் ஒரு நடன கலைஞரின் வீடியோவும், சிறுமி ஒருவரின் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ | Viral Video: என்ன ஒரு கம்பீர நடை; இதுவல்லவோ அசல் ‘பாயும் புலி’

ஹைதராபாத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர் ம்ரினாலி கிரண் என்பவர் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகை,  இவர் அல்லு அர்ஜுன் அணிந்திருக்கும் உடை போலவே அணிந்துகொண்டு 'புஷ்பா' (Pushpa) படத்தின் 'சாமி சாமி' பாடலுக்கு சற்றும் மாறாமல் அவரை போலவே அச்சு அசலாக நடமாடுகிறார்.  அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் “என்னுடைய பேவரைட் @alluarjunonline சாரின் நடன சேலஞ்சை நான் எப்படி ஏற்காமல் இருப்பேன்.  அவரை போல் நான் நடனமாடிய இந்த வீடியோவை நான் இதுவரை 30-40 முறைக்கு மேல் பார்த்துள்ளேன்" என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோ  9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.  இதில் பலரும் நேர்மறையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.  இதில் ஒரு பயனர் நானும் இந்த வீடியோவில் உங்களை மட்டும் தான் பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார், மேலும் சிலர் இதய எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

இந்த பெண்ணின் வீடியோ வைரலாகி வரும் நிலையில் ஒரு சிறுமியின் நடன வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.  tania_and_sony என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் ஒரு சிறுமி 'புஷ்பா' படத்தின் 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு நடனமாடுகிறார்.  அந்த சிறுமியின் பின்புறம் உள்ள டிவியில் ஸ்ரீவல்லி பாடல் ஓடுகிறது, அதில் அல்லு அர்ஜுன் போலவே உடை அணிந்துகொண்டு அந்த சிறுமியும் நடனமாடுகிறார்.  சிறுமியின் இந்த கியூட்டான வீடியோ பார்ப்பவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.  இந்த வீடியோ இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.  பலரும் சிறுமியின் நடனத்தை பாராட்டி நல்லவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

ALSO READ | Viral Video: ‘சிங்கத்தை சீண்டினால் என்ன ஆகும்’; சிங்கம் பாடம் புகட்டும் வைரல் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News