டிவிட்டரில் தயாரிப்பாளர், இயக்குனர் மோதல்?

‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நரகாசூரன்’. இதில் ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை ரான் யோஹான் அமைத்துள்ளார்.

Last Updated : Mar 29, 2018, 12:03 PM IST
டிவிட்டரில் தயாரிப்பாளர், இயக்குனர் மோதல்? title=

‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நரகாசூரன்’. இதில் ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை ரான் யோஹான் அமைத்துள்ளார்.

ஷர்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கார்த்திக் நரேன் ‘நாடக மேடை’ படத்தை இயக்க தயாராகி உள்ளார்.

சமீபத்தில் கார்த்திக் நரேன், ‘சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்” என டிவிட்டரி பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன், ‘ஒரு வீடியோவை பாராட்டி பதிவு செய்திருக்கிறார். பின்னர், சில இளம் இயக்குனர்கள் படத்தை உருவாக்கி விட்டு அதைப் பற்றி புலம்பிக் கொண்டே இருகிறார்கள் என்று பதிவு செய்திருக்கிறார்.

இதைக் குறிப்பிட்டு கார்த்திக் நரேன், ‘பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் என்னை நீங்கள் எங்களை குப்பை போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்" என கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

Trending News