விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தி வருகிறது.
விழுப்புரம் மாவட்ட வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆராயி என்பவர் வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத சில நபர்கள் 14 வயது சிறுமி என்று கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை நடத்தியுள்ளனர். மேலும் அந்த சிறுமியின் தாய் ஆராயி மீதும் கொலைவெறி தாக்குதலும் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்து தாய் மற்றும் மகளையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையடுத்து, நடிகர் பிரசன்னா இந்த கொடூர சம்பவன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கொடூரத்தை அரங்கேற்றியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். மனிதம் மரித்ததெப்போது? என நடிகர் பிரசன்னா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.....!
விழுப்புரத்தில் ஆராயி மற்றும் அவரின் 8-வயது மகன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் மட்டுமே அதிகம் பெசபடாமல் இருக்கிறதா அல்லது வேறு காரணமா?.. கேரளாவில் மதுவை கொன்ற கும்பலை கைது செய்தது போல் இங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? மதுக்களும் ஆராயிகளும் பிள்ளைக்கொலைகளும் வன்புணர்வுகளும் நாளும் நடந்தேறும் நம் முற்றத்தை சீர் செய்யாத நாம் சீரியாவின் படுகொலைகளை எண்ணி உச்சுக்கொட்டி என்ன பயன்?. மனிதன் மரித்ததேப்போது?... என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
— Prasanna (@Prasanna_actor) February 26, 2018