கேரளா வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் -ராகுல்!

கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராகுல்காந்தி மோடிக்கு கோரிக்கை!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2018, 01:10 PM IST
கேரளா வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் -ராகுல்!  title=

கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராகுல்காந்தி மோடிக்கு கோரிக்கை!!

கேரளாவில் 3 வாரங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. எனவே, கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.... இதுவரை கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 164-ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்திருந்தார். வெள்ளதால் பாதிக்கப்படுள்ள கேரலாவிருக்கு பலரும் நிதியிதவியும், நிவாரண பணியளித்து வருகின்றனர். 

இதையடுத்து, கேரள வெள்ளப்பாதிப்பை தேசிய பேரிடராக எந்தத் தாமதமுமின்றி மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, கேரளாவில் லட்சக்கணக்கான மக்கள் உயிர், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மும்பு கேரளா வெள்ளம் குறித்து ட்விட்டரில் அவர் இட்டுள்ள பதிவில், கேரளா மற்றும் கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் முழு மூச்சுடன் உதவும் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். காங்கிரசின் சேவை மனப்பான்மை மற்றும் மக்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.....!

 

Trending News