கவுண்டமணி போல தலைகீழாதான் குதிப்பேன் என சேட்டை செய்யும் பாண்டா கரடி!

பாண்டா கரடி ஒன்று மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொட்டில் போன்று அந்தரத்தில் தொங்கும் ஒரு கூடையினுள் கீழே விழுந்துவிடாமல் அமரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 6, 2022, 11:05 AM IST
  • தலைகீழாக நின்று சேட்டை செய்யும் பாண்டா.
  • கீழே விழாமல் இருக்க கம்பியை கெட்டியாக பிடித்து கொள்கிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
கவுண்டமணி போல தலைகீழாதான் குதிப்பேன் என சேட்டை செய்யும் பாண்டா கரடி! title=

பாலூட்டி இனத்தை சேர்ந்த பாண்டா கரடிகள் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் கொழுகொழுவென்று பார்ப்பதற்கு அழகாக இருக்கும், பெரும்பாலும் பாண்டா கரட்டிகள் சீனாவை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகிறது.  பாண்டா கரடிகளின் குறும்புத்தனமான பல காட்சிகளை நாம் கண்டு ரசித்திருப்போம், வேடிக்கையான விஷயங்கள் நிரம்பிய இணைய உலகத்தில் இதுபோன்ற விலங்குகளின் வேடிக்கையான மற்றும் ரசிக்கும்படியான செயல்களும் எக்கச்சக்கமாக குவிந்து கிடக்கின்றது.  நம்மில் அதிகம் பேரால் நேரில் பார்த்திடாத இயலாத பாண்டா கரடியை இணையத்தில் காண முடிகிறது, பாண்டாக்கள் புல்லில் உருளுவது முதல் சோம்பேறித்தனமாக இருப்பது வரை அவை செய்யும் செயல்கள் ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க சிரிப்பை வரவழைக்க செய்கிறது. 

மேலும் படிக்க | சாகசம் செய்த இளைஞர்களை கீழே தள்ளிவிட்ட நபர்; பகீர் வீடியோ 

பாண்டா கரடிகள் நொடிப்பொழுதில் நம்முடைய கவனத்தை ஈர்த்துவிடக்கூடியதாக இருக்கிறது, அவை எப்படி க்யூட்டாக இருக்கிறதோ அதைப்போலவே அவை செய்யும் செயல்களும் க்யூட்டாகவே இருக்கின்றன.  தற்போது க்யூட்டான ஒரு பாண்டா கரடியின் வீடியோவை தான் பார்க்க போகிறோம், அந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரல் வீடியோவில் தொட்டில் போன்று ஒரு கட்டையில் கயிறு கட்டி அந்தரத்தில் கூடை ஒன்று தொங்கி கொண்டு இருக்கின்றது.  அந்த கூடைக்குள் உட்கார பாண்டா கரடி முயற்சி செய்கிறது, பல்டி அடிப்பது போல முதலில் கட்டையின் மீது செய்கிறது, பின்னர் மெது மெதுவாக இறங்கி கீழே விழுந்துவிடாமல் அந்த கூடைக்குள் அழகாக அமர்ந்துவிடுகிறது.

 

முயன்றால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதை உணர்த்தும் விதமாக பாண்டா கரடியின் இந்த வீடியோ அமைந்திருக்கிறது.  ட்விட்டரில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவை இதுவரை அறுபத்தி ஒன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் இந்த வீடியோவை பார்த்து ரசித்து இருக்கின்றனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு பல லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.

மேலும் படிக்க  போனுக்கு செம சண்டை போடும் குழந்தையும் குரங்கும்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ 

Trending News