வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும். பாம்பை பார்த்தால் அனைவரும் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடவே எண்ணுவார்கள். அதுவும் நாகப்பாம்பு என்றால் கேட்கவே வேண்டாம். சிறிய பாம்புகளை பார்த்தாலே மனம் பதபதைக்கும். அப்படிப்பட்ட நிலையில், ஒரு நாகப்பாம்பு திடீரென ஒருவரது வீட்டில் நுழைந்து, அதை வீட்டில் உள்ளவர்கள் பார்த்தால், பின், அவர்களது நிலை என்னவாகும்?
இப்படிப்பட்ட ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு வீட்டின் குளியலறைக்குள் ராஜ நாகம் புகுந்துள்ளதை காண முடிகின்றது. வீட்டில் உள்ளவர்கள் அதைப் பார்த்தவுடன் விக்கித்துப் போனார்கள். நாகப்பாம்பின் வீடியோவைப் பார்த்தவர்களுக்கும் இதே நிலைதான்.
குளியலறைக்குள் நுழைந்த நாகப்பாம்பு
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், மிகவும் ஆபத்தான ராஜ நாகப்பாம்பு ஒன்று வீட்டின் குளியலறைக்குள் நுழைவதைக் காண முடிகின்றது. பின்னர் அது அந்த குளியலறையிலேயே சுற்றி வருகிறது.
மேலும் படிக்க | நாகப்பாம்பை குளிப்பாட்டி குஷிப்படுத்திய நபர்: அதிசய வைக்கும் வைரல் வீடியோ
பின்னர் அது அங்கிருந்து போக வழி தேடுகிறது. இதற்குள் குளியறையில் நாகப்பாம்பை பார்த்த குடும்ப உறுப்பினர்கள் முதலில் பயந்தாலும், பின்னர், அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
குளியலறையில் புகுந்து பீதியை கிளப்பிய அந்த பாம்பின் வீடியோவை இங்கே காணலாம்:
அச்சுறுத்தும் காட்சி
நாகப்பாம்பின் இந்த வீடியோவைப் பார்த்தால் யாராலும் அச்சப்படாமல் இருக்க முடியாது. இப்படி நம் வீட்டிலும் நடந்தால் என்ன செய்வது என்ற கலக்கம் அனைவரையும் ஆட்கொள்ளும். இந்த வீடியோ snake_unity என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்து சமூக வலைதளவாசிகள் தொடர்ந்து பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
மேலும் படிக்க | அதிசய விளக்கும் சேட்டை அணிலும் - வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR