தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ!

பூனை ஒன்று சோஃபாவில் தூங்கிக்கொண்டிருக்கையில், தூக்க கலக்கத்தில் தலைகீழாக கீழே விழுந்த காட்சி ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 1, 2022, 06:54 AM IST
  • சோபாவில் அசந்து தூங்கும் பூனை.
  • தூக்கத்தில் கீழே விழுந்து விடுகிறது.
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ.
தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ! title=

இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களில் குறிப்பாக பூனைக்குட்டிகளின் வீடியோக்கள் பெரும்பாலான இணையவாசிகளை கவர்ந்து விடுகிறது.  அதற்கு காரணம் பூனைக்குட்டிகள் பார்ப்பதற்கு க்யூட்டாகவும், அவை செய்யும் செயல்களும் க்யூட்டாக இருப்பது தான், பலரது வீடுகளிலும் பூனைக்குட்டிகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.  இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரபலங்கள் கூட ஸ்க்ரிப்ட் தயார் பண்ணி அதற்கேற்ப பாவனைகள் செய்து வீடியோக்களை வெளியிடுகின்றனர்.  ஆனால் இந்த விலங்குகளோ எதையும் முன்கூட்டியே யோசித்து வைக்காமல் தற்செயலாக செய்கின்ற செயல்கள் மனிதர்களுக்கு பிடித்துப்போய்விடுகிறது.  இதுபோன்று விலங்குகள் தற்செயலாக செய்யும் குறும்புகளை இணையத்தில் பலரும் மெய்மறந்து பார்த்து ரசித்து வருகின்றனர், இத்தகைய வீடியோக்கள் எளிதில் வைரலாகி விடுகின்றன.

மேலும் படிக்க | ‘ஷ்ஷ்..அழாத’ தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லும் குரங்கு: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ

இப்போது நாம் இங்கு பார்க்கப்போவதும் ஒரு பூனையின் க்யூட்டான வீடியோ தான், அந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரல் வீடியோவில் ஒரு சோஃபா மீது இரண்டு பூனைகள் படுத்துக்கொண்டிருப்பதை காண முடிகிறது, பின்னர் அதில் வெள்ளை மற்றும் கருஞ்சாம்பல் நிறம் கலந்த பூனை ஒன்று தூக்க கலக்கத்தில் தனது உடலை நெளித்துக்கொண்டு அப்படியே தலைகீழாக விழுந்து விடுகிறது.  கீழே விழுந்தாலும் அந்த பூனை எதுவும் நடக்காதது போல அமைதியாக நின்றுகொண்டு இருப்பதுடன் இந்த வீடியோ நிறைவடைகிறது.

 

பூனையின் இந்த செயல் இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது, கடந்த 27ம் தேதியன்று இந்த வீடியோவானது ட்விட்டரில் பகிரப்பட்டு இருக்கிறது.  பூனையின் இந்த வீடியோவிற்கு இதுவரை ஆறாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் மற்றும் பலவிதமான கமெண்டுகள் குவிந்து வருகின்றது.

மேலும் படிக்க | தும்பிக்கை அரண் அமைத்து குட்டியை பாதுகாக்கும் யானைகளின் பாச வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News