கூரையிலிருந்து குதித்த காளை, கதிகலங்கிய மக்கள்: வியக்க வைக்கும் வைரல் வீடியோ

Bull Viral Video: கூரை மீது ஏறிச் செல்லும் காளையை பார்த்ததுண்டா? இந்த வீடியோவில் அதை காணலாம். அதுவும், இந்த காளை செய்யும் செயல்கள் நம்மை சிரிப்பில் ஆழ்த்துவதோடு, சிறிது அச்சத்தையும் ஏற்படுத்தும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 26, 2022, 05:33 PM IST
  • ஒரு கடையின் மேற்கூரையில் காளை ஒன்று ஏறி நிற்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
  • இதில் உள்ள காட்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் உள்ளது.
  • காளை கூரை மீது நிற்பது ஆச்சரியம் என்றால், அதற்கு பிறகு நாம் காணும் காட்சி நம்மை இன்னும் அதிசயிக்க வைக்கிறது.
கூரையிலிருந்து குதித்த காளை, கதிகலங்கிய மக்கள்: வியக்க வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

கூரை மீது ஏறிச் செல்லும் காளையை பார்த்ததுண்டா? இந்த வீடியோவில் அதையும் காணலாம். அதுவும், இந்த காளை செய்யும் செயல்கள் நம்மை சிரிப்பில் ஆழ்த்துவதோடு, சிறிது அச்சத்தையும் ஏற்படுத்தும். பல நேரங்களில் தெருவிலங்குகள் சாலைகளில் சுற்றித் திரிவதையும், மக்களை படுத்துவதையும் நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். ஆனால், நாம் அதிகம் பார்த்திருக்க முடியாத ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுள்ளது. ஒரு கடையின் மேற்கூரையில் காளை ஒன்று ஏறி நிற்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

இதில் உள்ள காட்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் உள்ளது. காளை கூரை மீது நிற்பது ஆச்சரியம் என்றால், அதற்கு பிறகு நாம் காணும் காட்சி நம்மை இன்னும் அதிசயிக்க வைக்கிறது. 

மேலும் படிக்க | தோழியுடன் விளையாடும் நாய்: கண்டிப்பா மீண்டும் மீண்டும் பார்ப்பீங்க, செம கியூட் வைரல் வீடியோ 

கூரை மீது ஏறிய காளை 

இந்த வீடியோவை, ஒரு சமூக ஊடக பயனர் பகிர்ந்துள்ளார். பல கடைகள் இருக்கும் ஒரு பகுதியில், சாலையோரத்தில் கட்டப்பட்டுள்ள கடையின் கூரை மீது காளை ஒன்று நிற்பதை காண முடிகின்றது. ஆனால் இந்த காளை எங்கிருந்து கூரை மீது ஏறியது என்று தெரியவில்லை. காளை கீழே இறங்க பல முயற்சிகள் செய்தாலும் அதனால் இறங்க முடியவில்லை. 

குதித்து இறங்கிய காளை 

கீழே இறங்கமுடியாமல் போகவே காளை மிகுந்த கோவத்தில் இருப்பதாக வீடியோவை பர்த்தால் தெரிந்துகொள்ள முடிகின்றது. பின்னர் அது ஒரு முடிவுக்கு வருகிறது. அது கோவத்துடன் கூரையில் இருந்து கீழே குதிக்கிறது. ஆனால், கூரைக்கும் சாலைக்கும் உள்ள இடைவெளியை அதனால் சரியாக கணக்கிட முடியவில்லை. பெரிய சத்தத்துடன் அது சாலையில் விழுகிறது. ஆனால், கீழே விழுந்த உடனேயே அது உடனடியாக எழுந்துகொள்கிறது. 

அச்சத்தின் உச்சிக்கு போன மக்கள்

காளை விழுந்த வேகத்தில் அதற்கு காயம் பட்டிருக்க வேண்டும். அது கூரையிலிருந்து கீழே குதித்தபோது, ​​சாலையில் சென்றவர்கள் பயந்து ஓட ஆரம்பித்தனர். காளை யாரையும் காயப்படுத்தவில்லை, எனினும், காளையின் இந்த ஸ்டண்டால், அங்கு இருந்தவர்கள் அச்சத்தின் உச்சிக்கு செல்கிறார்கள்.

முரட்டுக்காளையின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ajay Attri (@ajayattri_52)

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | 'குறுக்க இந்த கௌஷிக் வந்தா...' வெட்டிங் போட்டோஷூட்டை கெடுத்த குரங்குகள் - அடுத்து என்ன ஆச்சு? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News