நச்சுனு கிஸ் பண்ண மச்சினிச்சி: ஷாக் ஆன மணமகன், கடுப்பான மணமகள், வைரல் வீடியோ

Funny Wedding Video: மச்சினிச்சி மணமகனுக்கு கொடுத்த பளிச் முத்தத்தின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது அனைவரையும் ஷாக் ஆக வைத்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 1, 2022, 05:40 PM IST
  • தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
  • இந்த வீடியோவை பார்த்து அனைவரும் ஆடிப்போனார்கள்.
  • சகோதரியின் வருங்கால கணவருடன் போட்டோ எடுக்க மேடைக்கு வந்த ஒரு பெண் செய்த வேலையை யாராலும் நம்ப முடியவில்லை.
நச்சுனு கிஸ் பண்ண மச்சினிச்சி: ஷாக் ஆன மணமகன், கடுப்பான மணமகள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. இதில் பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண்கிறோம். சில சமயங்களில் திருமண மேடையிலேயே மணமகனும், மணமகளும் செய்யும் சில வேலைகளால் சிரிப்பை அடக்க கூட முடியாமல் போகிறது. பல நேரங்களில் யாரும் எதிர்பார்க்காத பல விஷயங்களும் மணமேடையிலேயே நடந்துவிடுகின்றன. திருமணத்துக்கு வந்துள்ள விருந்தினர்களை அதிச்சிக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் நடக்கின்றன. இவை இணையத்தில் பகிரப்பட்ட பின்னர் இணையவாசிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

தற்போது இது போன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இது மாப்பிள்ளை மற்றும் மச்சினி குறித்த வீடியோவாகும். இந்த வீடியோவை பார்த்து அனைவரும் ஆடிப்போனார்கள். சகோதரியின் வருங்கால கணவருடன் போட்டோ எடுக்க மேடைக்கு வந்த ஒரு பெண் செய்த வேலையை யாராலும் நம்ப முடியவில்லை. 

தன் அக்காவின் கணவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஒரு பெண் மணமெடைக்கு வருகிறார். ஆனால், திடீரென, யாரும் எதிர்பாராத வகையில், அவர் மாப்பிள்ளையை அழுத்தமாக பிடித்து முத்தம் கொடுக்கிறார். மச்சினிச்சியின் இந்த செயல், மாப்பிள்ளை, மணமகள், விருந்தினர்கள் என அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

அக்காவின் கணவனை முத்தமிட்ட பெண் 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமக்களுடன் புகைப்படம் எடுக்க உறவினர்கள் அனைவரும் மேடைக்கு செல்வதை காண முடிகின்றது. அனைவரும் திருமண நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து மணமகளின் சகோதரி அங்கு வந்து மணமகன் அருகில் அமர்ந்தார். அடுத்த நொடியே மாப்பிள்ளையை பிடித்து முத்தமிட ஆரம்பித்தாள். மணப்பெண்ணும் அவருடைய செய்கையால் திகைத்துப் போனார். 

மேலும் படிக்க | ’என்னயா வீடியோ எடுக்கிற’ முட்ட வந்த குட்டி யானையின் சுட்டித்தனமான வீடியோ 

மச்சினிச்சி செய்த ஷாக்கிங் செயலை இங்கே காணலாம்: 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 (@butterfly__mahi)

மணப்பெண்ணின் சகோதரி செய்த இந்த செயலை யாராலும் நம்ப முடியவில்லை. இதைக் கண்டு திருமணத்துக்கு வந்த அனைவரும் ஆடிப்போனார்கள். வீடியோவை பார்ப்பவர்களுக்கு அதே நிலைமைதான். இதன் பிறகு திடீரென அங்குள்ள சூழல் மாறியது. இந்த வீடியோ butterfly__mahi என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு, லைக் செய்யப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | புலியை ஏமாற்றி விழ வைத்த கில்லாடி குரங்கு: வயிறு குலுங்க சிரிக்கும் நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News