சைக்கிள் மட்டுமல்ல பொதுவாக வாகனங்கள் என்றாலே அதன் சக்கரங்கள் வட்ட வடிவத்தில் தான் இருக்கும், இதுவரை அந்த வடிவத்தில் இருந்து தான் நாம் பார்த்திருக்கிறோம். சக்கரம் வட்டவடிவமாக இருந்தால் தான் அதனால் ஒழுங்காக சுழல முடியும், வட்ட வடிவம் தான் சக்கரத்தால் சரியாக இயங்க முடியும். மனித இனம் கண்டுபிடித்த சிறப்பான கண்டுபிடிப்புகளில் ஒன்று இந்த வட்ட வடிவ சக்கரம் என்றுகூட கூறலாம். உலகில் தொழில்நுட்பம் பல்வேறு வகையில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது, வாகனங்களின் தயாரிப்பில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகிறது.
என்னதான் வாகனங்களில் பல்வேறு தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வந்தாலும் இதுவரை நாம் வட்ட வடிவ சக்கரத்தை மட்டும் தான் பார்த்து இருக்கிறோம். ஆனால் இப்போது ஒரு பொறியாளர் சைக்கிளின் சக்கரத்தை வட்ட வடிவத்திற்கு பதிலாக சதுர வடிவத்தில் சக்கரத்தை வடிவமைத்து இருக்கிறார். இதுவரை சைக்கிள் சக்கரத்தை வட்ட வடிவத்தில் பார்த்து வந்திருந்த நமக்கு சதுர வடிவத்தில் சக்கரத்தை பார்ப்பதற்கு சற்று ஆச்சர்யமாக இருக்கிறது. செர்ஜி கோர்டியேவ் எனும் பொறியாளர் தனது யூடியூப் சேனலில் சதுர வடிவ சக்கரம் கொண்ட சைக்கிளை வடிவமைத்து இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார், சக்கரத்தை வடிவமைத்தது மட்டுமல்லாது அதனை இயங்கவும் வைத்திருக்கிறார்.
How The Q created a bike with fully working square wheels (capable of making turns)
video: https://t.co/wWdmmzRQY3]pic.twitter.com/bTIWpYvbG1
— Massimo (@Rainmaker1973) April 11, 2023
இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க செய்துள்ளது மற்றும் செர்ஜிக்கு பாராட்டுக்களையும் அள்ளித்தந்து இருக்கிறது. இயற்பியல் தத்துவத்தின்படி, சதுர வடிவ சக்கரம் கொண்ட வாகனம் இயங்குவது சாத்தியமில்லை என்றாலும், இதனை பொறியாளர் செர்ஜி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். செர்ஜி உருவாக்கிய சதுர சக்கரம் வட்ட வடிவ சக்கரத்தை போல சுழல்வதாக இல்லை, ஒரு சதுரமான சட்டத்தை உருவாக்கி அதனைச் சுற்றும்படி மாற்றியமைத்து இருக்கிறார். இந்த சதுர வடிவ சக்கரத்தின் மேல்புறத்தில் உள்ள பெல்ட் மட்டுமே சுழல்கிறது, இதுபோன்ற சதுர வடிவ சக்கரம் கொண்ட வாகனங்கள் எதுவும் இருந்திருந்தாலும் செர்ஜி வடிவமைத்த சக்கரம் போன்று சிறப்பாக எந்த சக்கரமும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பொண்ணு ஆடிய ஆட்டத்துக்கு மேடையே பத்திக்கிச்சு: வேற வெவல் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ