'தா தா 87' திரைப்படத்தின் 'அவ என் ஆளு' பாடல் வெளியானது!

நடிகர் சாருஹாசன் நடிப்பில் விரைவில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் "தா தா 87". இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’அவ என் ஆளு’ பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Written by - Mukesh M | Last Updated : Aug 17, 2018, 11:14 AM IST
'தா தா 87' திரைப்படத்தின் 'அவ என் ஆளு' பாடல் வெளியானது! title=

நடிகர் சாருஹாசன் நடிப்பில் விரைவில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் "தா தா 87". இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’அவ என் ஆளு’ பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் இணைந்து நடிக்கும் திரைப்படம் "தா தா 87". நடிகர் கமலஹாசன் சகோதரர் சாருஹாசன் முதன்மை கதாப்பாத்திரம் ஏற்க அவருடன் ஜனகராஜ் இப்படத்தில் களமிரங்குகிறார். சாருஹாசனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ்-ன் பாட்டி சரோஜா நடிக்கின்றார். இவர்களுடன் கலக்கப்போவது யாரு புகழ் ஆனந்த் பாண்டி, ஜெனி பல்லவி, அனு லாவண்யா நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் ஆறு அடி ஆண்டவன் என்னும் பாடலின் ப்ரோமோவினை நடிகர் விஜய் சேதுபதி வெளியட, இந்த வீடியோ இணையத்தில் சக்கைப் போடு போட்டது. 

இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’அவ என் ஆளு’ பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலினை பாடகர் வேல்முருகன் பாடியுள்ளார். 

Trending News