இணையத்தில் வைரல்! 215 அடி உயரமான சூர்யா கட்-அவுட்!

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தை கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்கள் உயரமான கட் அவுட் வைத்துள்ளனர் இணையத்தில் வைரலாக்கி உள்ளனர்.

Last Updated : May 29, 2019, 06:23 PM IST
இணையத்தில் வைரல்! 215 அடி உயரமான சூர்யா கட்-அவுட்! title=

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தை கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்கள் உயரமான கட் அவுட் வைத்துள்ளனர் இணையத்தில் வைரலாக்கி உள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்.ஜி.கே’. இந்தப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பொன்வண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். 

இந்தப்படத்துக்காக சூர்யா ரசிகர்கள் இந்தியாவிலேயே மிக உயரமான கட்-அவுட் வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். அந்தவகையில் விஜய்க்கு 175 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும், அதனைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்துக்காக அஜித்துக்கு திண்டுக்கல்லில் 190 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும் தான் மிகப்பெரிய கட்-அவுட்டுகளாகும்.

இந்நிலையில் இவற்றை விட உயரமாக வைக்க வேண்டும் என்று முடிவு செய்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கட்-அவுட் வேலை இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதன் உயரம் சுமார் 215 அடி. இதற்கான விழா நாளை மாலை 4 மணியளவில் கொண்டாடப்படுகிறது. 

 

 

 

Trending News