நயன்தாரா! எனக்கு கிடைத்த விருது: விக்னேஷ் சிவன் ட்வீட்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு கிடைத்த விருதினை அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்!

Last Updated : Jun 4, 2018, 12:05 PM IST
நயன்தாரா! எனக்கு கிடைத்த விருது: விக்னேஷ் சிவன் ட்வீட்! title=

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ரஜினி முதல் விஜய்சேதுபதி வரை அனைத்து முக்கிய நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார். முன்னதாக, 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் வெளிநாடுகளில் சுற்றித் திரிகின்றனர். இருவருக்கும் ரகசியமாக நிச்சயாதார்த்தமும் நடந்ததாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து, இருவருக்கும் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். 

இதையடுத்து, நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் வரும் கல்யாண வயசு பாடல் வீடியோ பார்த்த விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்..! ''நேக்கு கல்யாண வயசு வந்திடுத்து டி'' என பதிவிட்டி ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சியின் விருது வழங்கும் விழாவில் நயன்தாராவிற்கு சிறந்த நடிகைக்கான விருது அவர் நடித்திருந்த அறம் திரைப்படத்திற்காக கிடைத்தது. மேலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைக்கான விருதும் நயன்தாராவிற்கு கிடைத்தது. அவர் பெற்ற இரண்டு விருதுகளுடனும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் செல்ஃபி எடுத்திருந்தார். 

இதனை தனது டிவிட்டரில் பகிர்ந்து கொண்ட விக்னேஷ் சிவன் கூறியதாவது,,,! என் விருதுடன் அவளுக்கு கிடைத்த விருதுகளுடன்” என பதிவிட்டிருந்தார். இதில் அவர் நயன்தாராவை தான், என் விருது என காதலுடன் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

 

Trending News