மோகன் ராஜா இயக்கத்தில் உருவாக உள்ள ரீமேக் படத்தில், பெண் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.!
தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா (Nayanthara) மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் (Vignesh Sivan) ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கினறனர். கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக காதலித்து வரும் இந்த ஜோடி அடிக்கடி வெளிநாடு சென்று விதவிதமான, நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "நானும் ரவுடிதான்". இந்த திரைப்படத்தில் பணியாற்றிய போது இருவரும் காதலிக்க தொடங்கினார்கள் என்றும், இவர்களது ஐந்து வருட காதல், இந்தவருடம் முடிவுக்கு வந்து இந்த ஆண்டு திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றனர்.
ALSO READ | See Pic's: இணையத்தை கலக்கும் லேடி சூப்பர் ஸ்டாரின் லேடஸ்ட் புகைப்படம்!
இந்நிலையில், விரைவில் நயன்தாரா பிரபல நடிகருக்கு மனைவியாக உள்ளாராம். அது வேறொன்றும் இல்லை, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி (Chiranjeevi) நடிக்கும் லூசிபர் (Lucifer) தெலுங்கு ரீமேக் ஒன்றில் வில்லன் மனைவியாக நடிக்க உள்ளாராம்.
மலையாளத்தில் மஞ்சுவாரியர் (Manju Warrier) நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க வைக்க திட்டமிட்டு வருக்கின்றனர். கதைப்படி அது ஒரு பெண் அரசியல்வாதி கதாபாத்திரம். இந்தக் கூட்டணி உறுதியானால், சிரஞ்சீவியும் நயன்தாராவும் இணையும் இரண்டாவது படமாக இது அமையும். அவர்கள் இருவரும் ஏற்கனவே சைரா (Sye Raa Narasimha Reddy) படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதேபோல் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகை நயன்தாரா ஏற்கனவே தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்..
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR