நடராஜனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த யோகி பாபு; புகைப்படங்கள் வைரல்

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு நடிகர் யோகி பாபு முருகன் சிலை ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 4, 2021, 06:11 AM IST
நடராஜனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த யோகி பாபு; புகைப்படங்கள் வைரல் title=

சேலம் சின்னப்பம்பட்டி என்ற ஊரை செந்தா டி.நடராஜன்  இந்தியத் அணி வீரர் ஆவார். இவர் 2020 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் இந்திய அணியில் அறிமுகமானார். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி உள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி (Indian Team) ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 3 வடிவ கிரிக்கெட் தொடர்களில் அறிமுகமான நடராஜன் (T Natarajan). இந்த போட்டிக்கு பின்னர் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் நடராஜன் இங்கிலாந்து தொடர், ஐபிஎல் எதிலும் கலந்துக்கொள்ளாமல் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.

ALSO READ | #Thalapathy65: விஜய்யின் பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது, குதூகலத்தில் ரசிகர்கள்

இந்நிலையில் தற்போது காமெடி நடிகர் யோகி பாபுவை (Yogi Babu) கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்துள்ளார். இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டே உணவு உட்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பில் கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு யோகி பாபு முருகர் சிலையை ஒன்றை பரிசளித்துள்ளார். இது குறித்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் யோகிபாபுவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து ”நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய நாள். அன்பான மற்றும் கலகலப்பான நண்பர், நடிகர் யோகிபாபுவை சந்தித்த மகிழ்ச்சியான தருணம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

 

முன்னதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி யோகிபாபுவின் மண்டேலா படத்தை பாராட்டியிருந்தார். யோகி பாபு எனது நண்பர்தான் என்றுக்கூறி ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியை நடிகர் யோகி பாபுவுடன் வீடியோ காலில் பேசவைத்தார் நடராஜன்.

ALSO READ | யோகி பாபு மாஸ் கிரிக்கெட் வீடியோ: பட்டையைக் கிளப்பும் யோகி பாபு, புகழ்ந்து தள்ளும் fans

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News