Video: தமிழில் அசத்தும் தோனி-யின் மகள் ஸிவா தோனி!

IPL 2019 தொடர் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் தோனியின் மகள் தமிழில் பேசி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!

Last Updated : Mar 25, 2019, 01:45 PM IST
Video: தமிழில் அசத்தும் தோனி-யின் மகள் ஸிவா தோனி! title=

IPL 2019 தொடர் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் தோனியின் மகள் தமிழில் பேசி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!

IPL வந்துவிட்டாலே தோனி வைரலாவதைவிட அவரது மகள் ஸிவா அதிகம்  வைரல் ஆவார். ஸிவா எது செய்தாலும் அது வீடியோவாக வெளிவந்து செம வைரலாகும். தோனியை பின்தொடருபவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அதற்கு இணையாக ஸிவாவுக்கும் சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருபவர்கள் இருக்கிறார்கள்.

கடந்த IPL தொடரின் போது அப்படிதான் ஸிவா என்ன செய்தாலும் வீடியோவாக வெளியாகி செம வைரலானது. இந்த வருடமும் அந்த வகையில் தோனி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஸிவாவின் வீடியோ சமூக வலைதளம் முழுவதும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் தோனி ‘எப்படி இருக்கீங்க’ என்று தோனி ஆறு மொழிகளில் கேட்கிறார். அதற்கு ஏற்றார்போல ஸிவா அந்தந்த மொழிகளில் பதில் சொல்கிறார். தமிழில்  ‘எப்படி இருக்கீங்க’ என்று தோனி கேட்க அதற்கு ஸிவா,  ‘நல்லா இருக்கேன்’ என்று தன்னுடைய மழலை மொழியில் பதில் அளிக்கின்றார்.

இதனை தொடர்ந்து வங்காளம், குஜராத்தி, போஜ்புரி, பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் எப்படி இருக்கீங்க என்று தோனி கேட்க, ஸிவா தகுந்த மொழிகளில் பதிலளித்தார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M S Dhoni (@mahi7781) on

இறுதியாக தோனி  ‘இன்ஷா அல்லாஹ்’ என்று சொல்ல  ‘மாஷா அல்லாஹ்’ என்று ஸிவா பதில் அளிக்கின்றார். தற்போது இந்த வீடியோவை தோனி அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யபட்டு உள்ளது.

Trending News