குரங்கின் வலையில் சிக்கிய நபர்.. சோனமுத்தா போச்சா.. வீடியோ வைரல்

Monkey Viral Video: இந்த வீடியோவில், ஒருவர் எப்படி மரத்தில் ஏறுகிறார் என்பதை நீங்கள் பார்க்கலாம், ஆனால் அவருக்கு பின்னர் ஒரு குரங்கும் எப்படி தொல்லை செய்ய பின் தொடர்கிறது என்பதை நாம் கான முடிகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 1, 2023, 12:44 PM IST
  • மரத்தின் ஏறிய நபரின் நிலை மோசமானது.
  • காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள்.
  • இன்றைய வைரல் வீடியோ.
குரங்கின் வலையில் சிக்கிய நபர்.. சோனமுத்தா போச்சா.. வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகளின் மனநிலையை கணிப்பது கடினம். ஒரு சமயம் அமைதியாக இருக்கும் இவை அடுத்த கணமே அட்டகாசம் செய்யத் துவங்கிவிடும். அதனால்தான் அடிக்கடி தன் கருத்தை மாறி மாறி கூறுபவர்களை குரங்கு புத்தி என கூறுகின்றனர்.

மேலும் படிக்க | அந்த நட்பு மட்டும் இல்லேன்னா.. பல்லியை பதம் பார்க்க நினைத்த பாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள வீடியோ குரங்குகளின் குறும்பு தொடர்பான வீடியோ ஆனால் சற்று வித்தியாசமானது. இதில், மரத்தில் குரங்கு கூட்டத்தின் நடுவே ஒருவர் எப்படி சிக்கிக் கொள்கிறார் என்பதை பார்க்கலாம். இங்கு அவர் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத நிலைக்கு ஆளாகுகிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

குரங்குகளிடம் வசமாக மாட்டிக்கொண்ட நபர்
வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்து ஒருவர் மரத்தில் ஏறுவது போல தெரிந்தது, அப்போது தான் இரண்டு குரங்குகளும் அங்கு வருகின்றன. குரங்கு நபர் ஏறும் கிளையில் அமர்ந்து கிளையை வலுவாக அசைக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக, நபரின் நிலை போசமடையத் தொடங்குகிறது. குரங்கும் ஆளை விழச் செய்த பிறகே அங்கிருந்து நகரும் போல் தெரிகிறது. இந்த செயலையை அந்த குரங்கு தொடர்ந்து செய்துகிக்கொண்டே தான் இருகிறது.

குரங்கின் வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

மரத்தின் ஏறிய நபரின் நிலை மோசமானது
இந்த வீடியோவில் குரங்குகள் செய்யும் குறும்புகள் உண்மையில் பார்க்க வேண்டியவை. இதுவரை குரங்குகளின் லட்சக்கணக்கான வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் அதில் காணப்படும் காட்சி பொதுவாக எங்கும் காணப்படுவதில்லை. இந்த வீடியோ Moneyloversklub என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இதுவரை லட்சக்கணக்கான லைக்குகளையும் பார்வைகளையும் பெற்றுள்ளது.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | அய்யய்யோ சிரிப்ப அடக்கவே முடியல.. விலங்குகள் இப்படி கூட செய்யுமா? வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News