'அட..நிஜமாவே இது நான்தானா?' கண்ணாடி பார்த்து குழம்பிய குரங்கு, செம கியூட் வைரல் வீடியோ

Funny Viral Video: இப்படி ஒரு லூட்டி குரங்கை நீங்கள் பார்த்திருக்க முடியாது!! பயங்கர கியூட்டான குரங்கு வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 23, 2022, 04:15 PM IST
  • பைக்கில் குரங்கு செய்யும் லூட்டி.
  • கண்ணாடியில் முகத்தை பார்த்து கொடுக்கும் ரியாக்ஷன்.
  • வைரலாகும் வீடியோ.
'அட..நிஜமாவே இது நான்தானா?' கண்ணாடி பார்த்து குழம்பிய குரங்கு, செம கியூட் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் உலகில் உள்ள மிகவும் அறிவார்ந்த உயிரினங்களில் ஒன்றாகும். இவற்றின் புத்திசாலித்தனத்தை எடுத்துக்காட்டும் பல வீடியோக்களை நாம் சமூக வலைதளங்களில் தினமும் காண்கிறோம். குரங்குகளின் பல வேடிக்கையான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன. மனிதர்கள் செய்வதை அப்படியே செய்வதில் குரங்குகள் வல்லமை படைத்தவை. குரங்கின் சேட்டை ஒன்றை காட்டும் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்தால் யாராலும் சிரிப்பை அடக்க முடியாது. 

இதில் குரங்கு காட்டும் ஸ்டைலும் அது அடிக்கும் லூட்டிகளும் அனைவரையும் வியக்க வைக்கிறது. இந்த வீடியோவை இணையவாசிகள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள். அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பவர்களை குரங்கு புத்தி என்று கூறுவார்கள்!! ஏனெனில், குரங்குகள் சில வினாடிகள் கூட அமைதியாக இருக்காது. ஏதாவது சில்மிஷம் செய்துகொண்டே இருக்கும். இந்த வைரல் வீடியோவிலும் இதே போன்ற ஒன்றை நம்மால் பார்க்க முடிகின்றது. 

மேலும் படிக்க | சிறுத்தையை ஓட விட்ட குரங்கு, இது உனக்கு தேவையா: வீடியோ வைரல்

வீடியோவில் பைக் ஒன்று நிற்பதையும், குரங்கு அதன் மீது வசதியாக வந்து அமர்வதையும் காண முடிகின்றது. பைக்கில் அமர்ந்த குரங்கு செய்யும் செயல்கள் காண்பவர் அனைவரையும் சிரிக்க வைக்கிறது. குரங்கு கண்ணாடியில் அதன் முகத்தைப் பார்க்கிறது. ஹேண்டில் பாரை திருப்பி சில்மிஷம் செய்கிறது. குரங்கின் ஸ்டைலைப் பார்த்தால் அந்த வண்டியை ஓட்டாமல் அதை விட்டு இறங்காது என தோன்றுகிறது. தன் முகத்தை அது மீண்டும் மீண்டும் கண்னாடியில் பார்க்கிறது. கண்ணாடியை அருகில் பிடித்தும் பார்க்கும் குரங்கு அதன் பின் செய்யும் ரியாக்ஷன் பயங்கர கியூட்டாக உள்ளது.

லூட்டி குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 (@ram_maurya55555)

வீடியோவில் உள்ள குரங்கின் ஆட்டத்தை பார்த்து அனைவருக்கும் ஆச்சரியம் மோலோங்குகிறது. இந்த காட்சி முழுவதும் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'radha.reddy4' என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, இணையவாசிகள் இதற்கு பல வித வேடிக்கையான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | சூப்பராக பாத்திரம் தேய்க்கும் குரங்கு: கொஞ்சித் தீர்க்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News