வடிவேலுவின் வடபோச்சே ரியாக்சனை ரீகிரியேட் செய்த குரங்கு! வைரல் வீடியோ!

குரங்கு ஒன்று ஆசை ஆசையாக வாழைப்பழத்தை சாப்பிட தோலை உரித்துக்கொண்டிருக்கும்போது அந்த பழம் எதிர்பாராத விதமாக குளத்திற்குள் விழுந்து விடுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 17, 2022, 08:05 AM IST
  • ஆசையை வாழைப்பழம் சாப்பிட உட்கார்ந்த குரங்கு.
  • தவறுதலாக பழம் தண்ணீருக்கள் விழுந்து விடுகிறது.
  • குரங்கின் ரியாக்சன் இணையத்தில் வைரல்.
வடிவேலுவின் வடபோச்சே ரியாக்சனை ரீகிரியேட் செய்த குரங்கு! வைரல் வீடியோ! title=

குரங்கிலிருந்து பிறந்தது தான் மனிதன் என்று காலங்காலமாக கூறப்பட்டு இருக்கிறது, குரங்கின் பரிணாம வளர்ச்சி தான் இன்றைய நாகரீக மனித இனம்.  மனிதர்களின் செயல்களும், குரங்குகளின் செயல்களும் பெரும்பாலும் பல சமயங்களிலும் ஒன்றாகவே இருக்கிறது, அவை செய்யும் சேட்டைகளும் சில சமயங்களில் நகைச்சுவையாக தான் இருக்கும்.  உணவு என்பது அனைத்து உயிரினங்களுக்கும் முக்கியமான ஒன்று, தனது உணவு பறிபோகும்போது நமக்கு எவ்வளவு வருத்தமாக இருக்குமோ அப்படிதான் மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும்.  இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் இப்போது ஒரு குரங்கின் உணவு பறிபோகும்போது அதன் ரியாக்ஷன் நகைச்சுவையாகவும் அதேசமயம் பார்ப்பதற்கு பாவமாகவும் இருக்கிறது.  

மேலும் படிக்க | Viral Video: நாய்க்குட்டியை கட்டி அணைக்கும் பூனை; இணையத்தை கலக்கும் வீடியோ!

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் நீர் நிரம்பிய குளம் போன்ற ஒரு இடத்தின் அருகே குரங்கு ஒன்று கையில் வாழைப்பழத்தை வைத்துக்கொண்டு அமர்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது.  அந்த குரங்கானது ஆசைஆசையாக அந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதற்காக கொண்டு வந்து அதனை உரித்துக்கொண்டு இருக்கிறது, அப்போது பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது என்று சொல்வதை போல குரங்கு கையிலிருந்து பழம் நழுவி அந்த தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது.  குரங்கின் தனது கையில் வாழைப்பழத்தோலை மட்டும் வைத்துக்கொண்டு அப்பாவியாக இருக்கிறது, பின்னர் அந்த குரங்கு மனமுடைந்து எழுந்து சென்றுவிடுகிறது.

 

சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவானது பலரது கவனங்களை கவர்ந்து இருக்கிறது, இந்த வீடியோ நகைச்சுவையை ஏற்படுத்தியதை விட, குரங்கின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்து இருக்கிறது.  இந்த வீடியோ பல்லாயிரக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க | பாகனிடம் பாசமழை பொழியும் கியூட் யானை: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News