கண்ட்ரோல் பண்ண முடியாமல் டான்ஸ் ஆடிய கணக்கு டீச்சர்: இணையத்தை கலக்கும் வீடியோ

Funny Viral Video: பள்ளி ஆசிரியர் மாஸாக ஆடிய நடனத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 5, 2022, 03:42 PM IST
  • நடன வீடியோக்களுக்கு இணையவாசிகளிடம் எப்போதும் சிறப்பான நாட்டம் இருக்கும்.
  • சமூக ஊடகங்களில் தற்போதும் ஒரு வித்தியாசமான நடன வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
  • இது காண்பவர்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.
கண்ட்ரோல் பண்ண முடியாமல் டான்ஸ் ஆடிய கணக்கு டீச்சர்: இணையத்தை கலக்கும் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. நடன வீடியோக்களுக்கு இணையவாசிகளிடம் எப்போதும் சிறப்பான நாட்டம் இருக்கும். பல வித நடன வீடியோக்கள் இணையத்தில் பகிரப்படுவதும் உண்டு.

சமூக ஊடகங்களில் தற்போதும் ஒரு வித்தியாசமான நடன வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது காண்பவர்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நடனத்துக்கான ஒரு ஆர்வம் இருக்கும் என கூறுவார்கள். இதற்கு வயது வித்தியாசமோ, அந்தஸ்து வித்தியாசமோ, பதவி வித்தியாசமோ கிடையாது. வாய்ப்பு கிடைத்தவுடனேயே அனைவரின் உள்ளிருக்கும் டான்சரும் வெளியே வந்துவிடுகிறார். சிலர் யாருக்கும் தெரியாமல் நடனமாட விரும்புகிறார்கள், சிலரோ, அனைவருக்கும் மத்தியில், தங்கள் நடனத்தை துவக்கி விடுகிறார்கள். 

தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நடன வீடியோ பொதுவாக பகிரப்படும் வீடியோக்களை விட ஒரு படி மேலே சென்றுள்ளது. ஒரு பள்ளி விழாவில் ஆங்கில ஆசிரியை முதலில் நடனமாடுவதை வீடியோவில் காண முடிகின்றது. அவரைத் தொடர்ந்து கணக்கு ஆசிரியரும் நடனமாடத் தொடங்குகிறார். அதன் பிறகு நடந்ததை பார்த்தால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. 

மேலும் படிக்க | தாத்தாக்கள் கொடுத்த மாஸ் பர்ஃபார்மன்ஸ்: வேற லெவல் ரியாக்‌ஷன், வைரல் வீடியோ 

ஆசிரியர்களின் மாஸ் நடனம் 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பள்ளியில் ஏதோ நிகழ்ச்சி நடப்பதை பார்க்க முடிகிறது. மாணவர்களுடன், ஆசிரியர்களும் நடனமாடுவது வீடியோவில் தெரிகிறது. அப்போது ஆங்கில ஆசிரியை நடனமாட மேடைக்கு வருகிறார். பாடல் ஆரம்பித்தவுடன் அவர் நடனமாடத் தொடங்குகிறார். கணக்கு ஆசிரியர் அருகில் நின்றுகொண்டு இதை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவரால் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை. அவரும் உடனடியாக நடனமாடத் துவங்குகிறார். இதைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்கிறார்கள். 

ஆசிரியர்கள் அட்டகாசமாக நடமாடும் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Papisociety (@papisociety)

மொத்தத்தில், ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்களின் இந்த நடன வீடியோ வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக வைரலாகி வருகிறது. இதனை நெட்டிசன்களும் பெரிதும் விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த வீடியோ papisociety என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | பூனைக்கு GYM TRAINER-ஆக மாறிய சிறுமி... வைரலாகும் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News