வைரல் வீடியோ: கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு...உயிரை காப்பாற்றுமாறு கெஞ்சிய நபர்

மலைப்பாம்பு ஒன்று முதியவரின் கழுத்தை இறுகி உயிரை பறிக்க முற்படும் வீடியோ காண்போரை பதற வைக்கிறது. பாம்புகளிடம் விளையாடிய நினைத்த அவர் விபரீதத்தை சந்திக்க நேர்ந்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 07:19 PM IST
வைரல் வீடியோ: கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு...உயிரை காப்பாற்றுமாறு கெஞ்சிய நபர் title=

பாம்பு மற்றும் விலங்குகளிடம் எப்போதும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவை எப்போதும் ஒருமாதிரியாக இருக்காது. ஏதாவதொரு சமயத்தில் அவற்றின் குணங்கள் வெளிப்பட்டுவிடும். அப்படியான சம்பவம் தான் இப்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் வைரலாகியுள்ளது. மலை பாம்பிடம் விளையாட நினைத்து கழுத்தில் சுற்றிக் கொண்ட நபர், உயிரை காப்பாற்றுமாறு கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டார். என்ன ஆனது என இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க | பாம்பு மூட்டைன்னு தெரியாம கைய வச்சுட்டானே! துள்ளி குதித்து ஒடும் இளைஞரின் வீடியோ வைரல்

இன்ஸ்டாகிராமில் பகிரவும் o_my_god_1.4.3 என்ற பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் முதியவர் ஒருவரின் கழுத்தில் மலைப்பாம்பு சுற்றியவாறு இருக்கிறது. அவர் அந்த பாம்பை பிடித்து, கழுத்தில் சுற்றிக் கொண்டு நடந்து வந்துள்ளார். உடனே அந்த பாம்பு அந்த முதியவரின் கழுத்தை இறுக்கத் தொடங்கியுள்ளது. அவரால் பாம்பின் இறுக்கத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை. உடனே, தன்னை காப்பாற்றுமாறு அருகில் இருப்பவர்களிடம் கூச்சல் மூலம் தெரிவிக்கிறார்.

அப்போது அங்கிருந்த இளைஞர்கள் ஓடிச் சென்று அந்த முதியவரின் கழுத்தில் இருந்த பாம்பை அகற்ற முற்படுகின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அந்தளவுக்கு மிகவும் இறுக்கமாக பாம்பு அவரின் கழுத்தை இறுக்கிக் கொண்டது. இருப்பினும் விடா முயற்சியை கைவிடாமல் பாம்பை அகற்றும் முனைப்பில் இருக்கும்போது முதியவர் பாம்பின் இறுக்கத்தால் கீழே சாய்ந்துவிடுகிறார். சுற்றி வேடிக்கை பார்ப்பவர்கள் அவருக்கு என்ன ஆனதோ என நினைத்து கத்தி கூச்சல் எழுப்புகின்றர். பார்க்கும்போதே பதறவைக்கும் இந்த வீடியோவின் இறுதியில் இளைஞர் பாம்பின் பிடியில் இருந்து முதியவர் காப்பாற்றுகிறார்.

மேலும் படிக்க | நூற்றுக்கணக்கான Pythonகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட நபர், பதற வைக்கும் வைரல் வீடியோ

மேலும் படிக்க | விளையாடிய நபரை வெச்சி செஞ்ச பாம்பு, வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News