அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் பலர் திருப்தி அடையவில்லை. அவ்வழியே, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் உச்சநீதிமன்ற முடிவில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "காந்தி கொலை வழக்கை இன்று உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரித்திருந்தால், தீர்ப்பு நாதுராம் கோட்சே ஒரு கொலைகாரன் தான் ஆனால் அவர் ஒரு தேச பக்தர்" என வந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு முன்னதாக தனது பதிவில் அவர்., "நீதி இல்லை, அனைத்தும் அரசியல்" என குறிப்பிட்டுள்ளார். துஷார் காந்தியின் இந்த ட்விட்டர் பதிவுகள் அயோத்தி வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்த வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பினை விமர்சிப்பதாக தெரிகிறது. என்றபோதிலும் துஷார் காந்தியின் இந்த கருத்திற்கு ட்விட்டர் பயனர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
துஷார் காந்தியின் இந்த ட்விட்டர் பதிவிற்கு பின்னர், துஷர் காந்தி மற்றும் அவரது குடும்பப்பெயரை மேற்கோள் காட்டி பலர் விமர்சனம் செய்தனர், என்றபோதிலும் பலர் நாது ராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று புகழ்ந்துள்ளனர். மறுபுறம் சிலர் துஷார் காந்தியின் ட்வீட்டுக்கு ஆதரவாக தோன்றியுள்ளனர்.
If the Gandhi Murder case was retried by the Supreme Court today, the verdict would have been Nathuram Godse is a Murderer but he is also a Desh Bhakt.
— Tushar (@TusharG) November 9, 2019
ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைப்பெற்று வரும் அயோத்தி ராம் ஜன்மபூமி தகராறில் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு நவம்பர் 9-ஆம் தேதி ஒருமனதாக தீர்ப்பளித்தது, 68 நாட்கள் நீடித்த வரலாற்று கேசவானந்த பாரதி வழக்கின் பின்னர், 40 நாள் நீடித்த அயோத்தி வழக்கு உச்சநீதிமன்ற வரலாற்றில் இரண்டாவது மிக நீண்ட விசாரணையாக மாறியது.
முன்னதாக, ராம்ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் 2.77 ஏக்கர் நிலத்தை இந்து, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த 3 அமைப்புகள் பகிர்ந்து கொள்ளலாம் என்று 2010-ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்தது. இந்த தீர்ப்பு செல்லாது என்றும், அந்த நிலம் முழுமையாக இந்துக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இந்த வரலாற்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில் இஸ்லாமியருக்கு மசூதி கட்டுவதற்கு ஏற்ற, முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குறிய நிலத்தில் இந்துக்கள் இராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு இந்து மத மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. அதேவேளையில் இஸ்லாமிய மக்களும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.