ப்ரெண்ட்ஸ் 2.0...படமே எடுக்கலாம் போல இருக்கே!! வாய் பிளக்க வைத்த நட்பு... வைரல் வீடியோ

Viral Video: குரங்கு, நாய் மற்றும் சேவலுக்கு இடையிலான இந்த நட்பும் இணக்கமும் பார்க்க மிகவும் நன்றாக இருக்கின்றது. இந்த காணொளியை பார்த்த மக்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 30, 2023, 05:38 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் Nature is Amazing என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
ப்ரெண்ட்ஸ் 2.0...படமே எடுக்கலாம் போல இருக்கே!! வாய் பிளக்க வைத்த நட்பு... வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது.  மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 

இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்களை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். அதுவும் நாய், பூனை, சிங்கம், புலி, குரங்கு, பாம்பு போன்ற விலங்குகளுக்கு மவுசு சற்று அதிகமாகவே உள்ளது. குறிப்பாக குரங்குகளின் வீடியோகளுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குரங்குகள் செய்யும் பல கோமாளித்தனமான விஷயங்களும் அவற்றின் குறும்பும் மக்களை மகிழ்விக்கின்றன. இவற்றை வீடியோக்களில் பார்க்கும்போது மிக வேடிக்கையாக இருக்கின்றது என்றால் அதை மறுப்பதற்கில்லை. 

சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் குரங்கு மட்டுமல்லாமல் அதனுடன் ஒரு நாயும் சேவலும் காணப்படுகின்றன. இவை மூன்றும் ஒன்றாக ஓய்வெடுப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த மூன்றையும் பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த விலங்குகளுக்கு இடையில் இருக்கும் நட்பை பார்த்து இணையவசிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுபோன்ற நட்பின் வீடியோவை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

நாய் மற்றும் கோழியுடன் குரங்கு ஒன்று அமர்ந்திருப்பதை வீடியோவில் காணலாம். மூன்றும் எந்த வித அச்சமும் இல்லாமல் தங்களுக்குள் உள்ள நட்பை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றன. வீடியோவின துவக்கத்தில் நாய் படுத்து இருப்பதையும், குரங்கு அதன் மேல் தலை வைத்து படுத்திருப்பதையும் அவற்றின் அருகில் சேவல் உறங்குவதையும் காண முடிகின்றது. சிறிது நேரத்தில் குரங்கு எழுந்து அமர்கிறது. பின் அது சேவலின் தலையை கோதி விடுகிறது. ஒரு அமைதியான பொழுதை கழிக்க மூன்றுக்கும் மற்ற விலங்குகளின் துணை தேவைபட்டது போல உள்ளது. குரங்கு, நாய் மற்றும் சேவலுக்கு இடையிலான இந்த நட்பும் இணக்கமும் பார்க்க மிகவும் நன்றாக இருக்கின்றது. இவற்றின் வாழ்வில் நட்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று தோன்றுகிறது. இந்த காணொளியை பார்த்த மக்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | ரவுடி பேபி மனைவியின் வெறித்தாக்குதல்! பாவப்பட்ட கணவர் வீடியோ வைரல்

ஆச்சரியம் அளிக்கும் வீடியோவை இங்கே காணலாம்:

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் Nature is Amazing என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'என்ன ஒரு நட்பு!!' என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். 'குரங்கு, நாய் மற்று சேவலின் நட்பை பார்த்தால் வியப்பாக இருக்கிறது' என்று மற்றொரு பயனர் தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | தடவிக்கொடுத்த பெண்... செம ரியாக்ஷன் காட்டிய குரங்கு: வேற லெவல் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News