பாம்புக்கு வந்த கோவத்த பாரு!! ஓடியே போன சிங்கம்: வைரலாகும் வீடியோ

Snake Lion Video: தேவையில்லாமல் பாம்பிடம் தலையை கொடுத்து மாட்டிக்கொண்ட சிங்கக்குட்டியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 4, 2023, 04:49 PM IST
  • விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
  • காட்டின் விதியை புரிந்துகொள்ளாமல் வாலாட்டிய சிங்கக்குட்டியின் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பாம்புக்கு வந்த கோவத்த பாரு!! ஓடியே போன சிங்கம்: வைரலாகும் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

காட்டிற்கென தனி சட்டங்கள் உள்ளன. அவற்றை அனைத்து உயிரினங்களும் கடைபிடிக்க வேண்டும். அவற்றில் முக்கிய விதி என்னவென்றால், அனைத்து விலங்குகளும் தங்கள் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. அங்கு அவற்றை வேறு யாரும் எதிர்க்க முடியாது. இந்த விதியை யாரேனும் உடைக்க முயன்றால், அதன் பாதிப்பை அவர்கள் தாங்கிக்கொள்ள வேண்டும். காட்டு விலங்குகளின் பல சுவாரசியமான வீடியோக்களை நாம் சமூக ஊடகங்களில் பார்த்துள்ளோம். 

காட்டின் விதியை புரிந்துகொள்ளாமல் வாலாட்டிய சிங்கக்குட்டியின் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வக் கோளாறால் சிங்கம் செய்யும் துடுக்கான வேலைக்கான தண்டனையும் அதற்கு உடனேயே கிடைத்து விடுகின்றது. 

மேலும் படிக்க | ‘ஏய்... என்ன விடு’: பெண்ணை மீண்டும் மீண்டும் சீண்டும் யானை, சிரித்து தீர்க்கும் நெட்டிசன்ஸ்

பாம்பை சீண்டிய சிங்கக்குட்டி

மலைப்பாம்பு மற்றும் சிங்கக்குட்டியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காட்டில் மலைப்பாம்பு ஒன்று படுத்திருப்பது வீடியோவில் தெரிகிறது. அப்போது ஒரு இளம் சிங்கம் வேடிக்கையான மனநிலையில் அங்கு செல்கிறது. முதலில் அது பாம்பை கவனமாக பார்க்கிறது. பின்னர் தனது வாயால் பாம்பை சீண்டத் தொடங்குகிறது. 

ஆனால், பாம்பு என்ன பார்த்துக்கொண்டு இருக்குமா? தனக்கு ஆபத்து என்பதை அது உணர்கிறது. தன்னை சீண்டிய சிங்கக்குட்டிக்கு பாம்பு ஒரு சரியான பதிலடி கொடுக்கிறது. தனது வாயை திறந்துகொண்டு பாம்பு சிங்கட்தின் மீது பாய்கிறது. இதைக் கண்டு அரண்டுபோன சிங்கம் உடனே பின்வாங்கி அவ்விடத்தை விட்டு சென்று விடுகின்றது. அங்கிருந்து உடனடியாக சென்றதால், சிங்கக்குட்டி தப்பித்துக் கொள்கிறது. 

சிங்கத்துக்கு பாம்பு கொடுத்த பதிலடியின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Wildma (@wildmaofficial)

பயந்து ஓடிய சிங்கம்

பாம்பின் தாக்குதலால் பயந்துபோன இளம் சிங்கம் அமைதியாக அங்கிருந்து வெளியேறுவதுதான் தனக்கு நல்லது என்று நினைத்து அப்படியே செய்கிறது. அது சென்ற பிறகு மீண்டும் மலைப்பாம்பும் தன் இடத்தில் வசதியாக அமர்ந்து கொள்கிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் Wildmaofficial என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. ‘சிங்கக்குட்டிக்கு பாடம் கற்பித்த பாம்பு’ என்று இந்த வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. 

இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'பாம்புக்கு இவ்வளவு கோபம் வருமா?’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'சிங்கம் காட்டின் சட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும்' என மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | காதலியை கவர் செய்ய ஜிம்முக்கு போகலையா பாஸ்? கங்காருவை கலாட்டா செய்யும் நெட்டிசன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News