’பசிக்கு பால் கிடைச்சா போதும்’ இளைஞரிடம் பால் குடிக்கும் சிங்கம் - வைரல் வீடியோ

சிங்கம் ஒன்று, இளைஞர் ஒருவர் பால்புட்டியில் கொடுக்கும் பாலை ஆர்வமாக குடிக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 23, 2023, 02:24 PM IST
  • பால் குடிக்கும் சிங்கம்
  • கொஞ்சி விளையாடுகிறது
  • இன்ஸ்டாகிராமில் வைரல்
’பசிக்கு பால் கிடைச்சா போதும்’ இளைஞரிடம் பால் குடிக்கும் சிங்கம் - வைரல் வீடியோ title=

இன்ஸ்டாகிராமில் கியூட்டான வீடியோக்கள் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக விலங்குகளுடன் மனிதர்கள் கொஞ்சி விளையாடும் வீடியோக்கள் ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும். அந்த வீடியோவை பார்க்கும்போது நாமும் அவர்கள்போல் விலங்குகளை ஆசையாக வீட்டில் வளர்க்கலாமே என்ற எண்ணம் கூட வரும். நாய் பூனை எல்லாம் எல்லோருடைய வீட்டிலும் இருக்கும். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட விலங்குகளை எல்லாம் மனிதர்களுடன் பார்க்கவே முடியாது. அவற்றை மனிதர்களுடன் பார்க்கும்போது சற்று வியப்பாக தான் இருக்கும். உதாரணமாக முதலை எல்லாம் கொடிய விலங்கு என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அது தாக்கும் வீடியோவை எல்லாம் பார்த்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

மேலும் படிக்க | இசை எனும் இன்ப வெள்ளத்தை ரசிக்க ஓடோடி வந்த மான் - வைரல் வீடியோ

அப்படியான முதலை கூட பண்ணையில் இருக்கும்போது அங்கிருக்கும் பராமரிப்பாளர்களின் சொல்லுக்கு கட்டுபடும் வீடியோவை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கும். அவர்களுடன் விளையாடுவதைக் கூட பார்க்கலாம். அப்படி நெஞ்சை நெகிழ்ச்சிக்குட்படுத்தும் வகையிலான வீடியோ ஒன்று தான் இப்போது நெட்டிசன்களின் கண்களில் பட்டு வைரலாகியுள்ளது. சிங்கங்கள் காடுகளைக் கடந்து பூங்காக்களில் வளர்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் ஒருசிலர் தங்களின் வீடுகளிலும் வளர்க்கிறார்கள். அவர்கள் அதற்காக முறைப்படியான அனுமதியை அந்நாட்டு அரசிடம் பெற்று வளர்க்கிறார்கள். அப்படி அனுமதி பெற்று சிங்கம் மற்றும் புலியை வளர்க்கும் ஒருவர், அதனோடு விளையாடும் வீடியோ மற்றும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

kodyantle என்ற பக்கத்தில் நீங்கள் இப்படியான வீடியோக்களை அதிகம் பார்க்க முடியும் ஒவ்வொரு வீடியோவும் ஒரு வகை என்றாலும், ஒரு வீடியோவில் சிங்கத்துக்கு பால்புட்டியில் பால் கொடுக்கிறார். பசியில் இருக்கும் சிங்கம் அந்த பாலை ரசித்து குடிக்கிறது. இந்த வீடியோ இப்போது வைரல் லிஸ்டில் இடம்பிடித்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றிருக்கிறது.  3 லட்சத்துக்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்து கமெண்டும் அடித்துள்ளனர். நீங்களும் இந்த அழகிய வீடியோவை பார்த்து ரசியுங்கள்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

மேலும் படிக்க | சரக்கடித்து மட்டையான குரங்கு... விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்: ஷாக்கிங் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News