த்ரில் வேட்டை.. பதுங்கி பதுங்கி மானின் மீது பாய்ந்த சிறுத்தை!

Leopard hunting deer viral video : சிறுத்தைகள் எந்த அளவிற்கு புத்திசாலித்தனமானவை, தந்திரமிக்கவை என்பதை அறிந்தகொள்ள தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை காணுங்கள். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 18, 2022, 04:23 PM IST
  • இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ளார்.
  • பலரும் இந்த வீடியோவை கண்டு மெய் சிலிர்த்து வருகின்றனர்.
  • இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
த்ரில் வேட்டை.. பதுங்கி பதுங்கி மானின் மீது பாய்ந்த சிறுத்தை! title=

Leopard hunting deer viral video : வன விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் காட்டும் வீடியோக்களைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. கூடவே, அந்த வீடியோவில் ஒரு அரிய விலங்கு இடம்பெற்றால் பார்ப்பவர்களுக்கு அது மிகுந்த உற்சாகத்தை அளிக்கும். 

அந்த வகையில், இந்திய வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டே ட்விட்டரில் சிறுத்தை எப்படி தந்திரமாக ஒரு மானை வேட்டையாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதுதான் தற்போது நெட்டிசன்களை சில்லிடவைத்துள்ளது. அந்த பதிவில்,"சிறுத்தைகள் மிகவும் புத்திசாலித்தனமானவை, திருட்டுத்தனமானவை..." என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | தாலி கட்டின பிறகு ஜாலியா இருக்கலாம்! 2 நிமிசம் பொருத்துக்கோ! வைரலாகும் மணமகன் வீடியோ

அந்த வீடியோவில், மான் ஒன்று புற்களை மேய்ந்துகொண்டிருக்கையில், சிறுதி தூரத்தில் சிறுத்தை மண்திட்டுகளின் பின் மறைந்திருக்கிறது. தொடர்ந்து, அடி மேல் அடி வைத்து மெதுவாக பதுங்கி சென்று, சாமர்த்தியமாக அந்த மானை வேட்டையாடுவது முழுவதும் பதிவாகியுள்ளது. ஏதோ அச்சுற்றுத்தல் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த மானும், எட்டுத்திக்கும் நொட்டம் விட்டும், சிறுத்தை பதுங்கியிருப்பதை அதனால் கண்டறிய முடியவில்லை. 

அந்த அளவிற்கும் லாவகமாக ஒரு மரணத்தின் பின்னும், அடர்ந்த புற்களுக்கு பின்னும் மறைந்திருந்தது அந்த சிறுத்தை. அதனை தாக்குவதற்கு ஒரு நொடி இருந்தபோதுதான், மான் சிறுத்தை கண்டு ஓட்டம் பிடித்தது. இருப்பினும், அந்த சிறுத்தை மானை வேட்டையாடிவிட்டதாகவே தெரிகிறது. 

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, எங்க எடுக்கப்பட்டது, யாரால் முதலில் பதிவேற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால், இந்த வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. வனத்துறை அதிகாரி பாண்டே இதை நேற்று மதியம் ட்விட்டரில் பதிவிட்டிள்ளார். மேலும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இருந்து எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

பலரும் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வரும் நிலையில், 45 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மேல் இதனை கண்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் போட்டுள்ளனர். தொடர்ந்து, இதுபோன்ற விலங்குகள் தொடர்பான வீடியோக்களை வனத்துறை அதிகாரிகள் பதிவிட்டு வருவதும் அவை வைரலாவது வாடிக்கையாகிவிட்டது.  

மேலும் படிக்க | வெள்ளை புலி பாத்திருப்பீங்க... வெள்ளை சிங்கத்த பாத்திருக்கீங்களா? - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News