திருமணம் என்றாலே கொண்டாடம் தான். பாரம்பரிய திருமண விழாக்களில்கூட மேலதாளங்கள் முழங்க இரு குடும்பத்தாரும் இணைந்து மணமக்களை ஊர்வலமாக அழைத்து வந்து, மண விழாவை சிறப்பிப்பார்கள். கொண்டாட்டமும் களைகட்டும். கால மாற்றத்திற்கு ஏற்ப திருமணங்கள் இப்போது புதிய வடிவம் பெற்று, ஒலி ஒளி இசை, கச்சேரி நடனம் என களைகட்டுகிறது. திருமண விழா மேடையிலேயே உறவினர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காலம் மலையேறி, மணப் பெண் மற்றும் மணமகன் ஆகியோரே நடனமாடும் காலத்தில் இருக்கிறோம்.
மேலும் படிக்க | Escaping Dog: முதலை வாய்க்கு போகாமல் தப்பிக்க முயலும் நாய்: வீடியோ வைரல்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸை நீங்கள் திறந்தால், அதில் வரும் 10 வீடியோவில் ஒரு வீடியோ நிச்சயம் மணப்பெண் மற்றும் மணமகன் நடனமாகத் தான் இருக்கும். அந்தளவுக்கு அந்த நடனத்தை ரசிக்கும் ரசனையும் மக்களிடம் அதிகரித்திருக்கிறது. அந்த வீடியோக்களைப் பார்த்து அவரவர் குடும்ப விழாக்களிலும் திருமண விழாவில் நடனத்தை அரங்கேற்றி மகிழ்கின்றனர். இப்போது அந்த திருமண நடன வைபத்தில் புதிய டிரெண்ட் ஒன்று உருவாகியுள்ளது.
Pure bliss pic.twitter.com/0gmUQ3R98I
— Rohit Thayyil (@RohitThayyil) June 24, 2022
அதாவது சாப்பாடு பரிமாறும் இடத்தில் சமையல்காரர் முதல் பந்தி பறிமாறுபவர்கள் வரை என அனைவரும் பாடல் இசைத்து ஆடிப்பாடுவது டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக கேரளாவில் இந்த டிரெண்ட் அதிகரித்துள்ளது. சாப்பாடு சாப்பிடும் இடத்தில் குதூகலமான பாடல்களை இசைத்து அனைவரும் எழுந்து நடனமாடி அசத்துகின்றனர். சேட்டன்கள் ஒவ்வொருவரும் காக்ஷி அம்னிபில்லா படத்தில் வரும் உய்யாரம் - பய்யாரம் பாடலுக்கு நடனமாடுகின்றனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் அதிக வரவேற்பை பெற்ற இப்பாடலுக்கு அவர்கள் இப்போது நடனமாடியது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. காமெடி என்னவென்றால், ஒருவர் வந்து சாப்பாடு பறிமாறு கூறியும், அதனைக் கண்டுகொள்ளாமல் உணவு பரிமாறுபவர் நடமானடுகிறார். டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ சுமார் 17 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | Thrilling Viral Video: ரிங் மாஸ்டரை பின்னி பெடலெடுக்கும் சிங்கம்: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR