Justin Bieber பாடலை பிழையில்லாமல் பாடும் கர்நாடக விவசாயி!

சில சுவாரசியமான சமையங்களில் இணையதளம் ஒரு மகிழ்ச்சியான ஊடகமாக நமக்கு தெரியும். குறிப்பாக ஒரு சில நேரங்களில் குறிப்பிட்ட வீடியோக்கல் அதன் தாக்கத்தால் நமது நேரத்தை தனதாக்கிக்கொள்ளும் போது...

Last Updated : Dec 17, 2019, 12:15 PM IST
Justin Bieber பாடலை பிழையில்லாமல் பாடும் கர்நாடக விவசாயி! title=

சில சுவாரசியமான சமையங்களில் இணையதளம் ஒரு மகிழ்ச்சியான ஊடகமாக நமக்கு தெரியும். குறிப்பாக ஒரு சில நேரங்களில் குறிப்பிட்ட வீடியோக்கல் அதன் தாக்கத்தால் நமது நேரத்தை தனதாக்கிக்கொள்ளும் போது...

குறிப்பிட்ட இந்த வீடியோக்கள் நம்மை மகிழ்விக்கும், ரசிக்கவைக்கும், உற்சாகப்படுத்தும். அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு 3 நிமிட 10 விநாடிகள் கொண்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

MS Isai Palli என்ற யூடியூப் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் கர்நாடக விவசாயி ஒருவர் ஜஸ்டின் பீபரின் 2009 சார்ட்பஸ்டர் பேபி பாடலை பாடுகின்றார். மேலும் இந்த வீடியோவினை ஒரு சிறு கதை களத்துடன் படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ கேட்பதற்கு இனிமையாகவும், பார்ப்பதற்கு அழகாவும் உள்ளது.

வீடியோவின் இறுதியில் பாடகர் பாடிக்கொண்டு இருக்க, பணியை விட்டு பாடல் பாடுகிறாயா என ஒரு நபர் அவரை விரட்ட... கையில் மண்வெட்டி தூக்கிக்கொண்டு அவர் ஓடும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது எனலாம்....

கர்நாடகா விவசாயியின் பாடல் பதிவு அசல் பதிப்பைப் போலவே நன்றாக இருந்தது, மேலும் அவரது பாடல் வரிகளும் சரியாகவே இருந்தன. இந்த வீடியோவை நீங்கள் தவறவிடக்கூடாது என்பதற்காக இந்த வீடியோவின் இணைப்பினை நாம் கீழே இணைத்துள்ளோம்.

இதுவரை இந்த வீடியோ 67,000 பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News