சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை கொண்டாடும் Reliance Jio‏!

ரிலையன்ஸ் ஜியோ-வும் தன் பங்கிற்கு வாழ்த்து வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது!

Last Updated : Dec 12, 2017, 01:06 PM IST
சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை கொண்டாடும் Reliance Jio‏! title=

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், இன்று தனது 67-வது பிறந்தநாளினை கொண்டாடுகின்றார்.

அவரது பிறந்த நாளை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர்.

மேலும் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'காலா' படத்தின் இரண்டாவது புதிய போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்தப் போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்நிலையில் நாடு முழுவதும் அவருக்கு வாழ்த்து கூறி போட்டோக்கள், வீடியோக்கள் வெளியிட்டு வரும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ-வும் தன் பங்கிற்கு வாழ்த்து வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது!

Trending News