Video: கமல், விக்ரம், அஜித் வரிசையில் தற்போது ஜெயம் ரவி!

கமல், விக்ரம் வரிசையில் தற்போது ஜெயம் ரவி-யும் தனது அடுத்த படத்திற்காக 20 கிலோ எடையினை குறைக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 13, 2018, 11:01 AM IST
Video: கமல், விக்ரம், அஜித் வரிசையில் தற்போது ஜெயம் ரவி! title=

கமல், விக்ரம் வரிசையில் தற்போது ஜெயம் ரவி-யும் தனது அடுத்த படத்திற்காக 20 கிலோ எடையினை குறைக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

டிக் டிக் டிக் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது ஜெயம் ரவி அடங்கமறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து தன் சகோதரரின் "தனி ஒருவன் 2" படத்திலும் அவர் நடிக்கவுள்ளது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விரு படங்களுக்கு இடையில் தனது அடுத்த படத்தினை குறித்த அறிவிப்பினை ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். 

வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல் ஐசரி கணேஷ் தாயாரிப்பில் உருவாகவுள்ள ரொமான்டிக் திரைப்படத்தில், குறும்படங்கள் வாயிலாக பிரபலமான பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கின்றார். இப்படத்திற்காக இவர் 20 கிலோ எடையினை குறைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் படப்பிடிப்பு வேலைகள் துவங்கப்படவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் வீடியோ ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் படத்தின் உறுப்பினர்களை தயாரிப்பாளர் எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றார் என வேடிக்கையாக படக்குழுவினர் காட்சிப்படுத்தியுள்ளனர்!

Trending News