பந்தில் எச்சிலை தடவிய விராட் கோலி; சச்சின் டெண்டுல்கரின் ரியாக்‌ஷன் - Watch

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தடை செய்யப்பட்ட செயலை செய்து அதிர வைத்தார்..!

Last Updated : Oct 6, 2020, 06:30 AM IST
பந்தில் எச்சிலை தடவிய விராட் கோலி; சச்சின் டெண்டுல்கரின் ரியாக்‌ஷன் - Watch title=

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தடை செய்யப்பட்ட செயலை செய்து அதிர வைத்தார்..!

துபாயில் நடைபெற்று வரும் 2020 ஐபிஎல் (IPL 2020) தொடரின் 19-வது லீக் சுற்றுப் போட்டியில், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதினார். இந்நிலையில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்து பெங்களூர் அணிக்கு சவால் விட்டது. பெங்களூர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா இந்தப் போட்டியில் அதிரடியாக ரன் குவித்தார். அவர் 23 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இருந்தார். 5 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து இருந்தார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் பெங்களூர் அணி திணறியது. மூன்றாவது ஓவரில் ப்ரித்வி ஷா அசத்தல் டிரைவ் ஒன்றை அடித்தார். பவுண்டரி செல்ல வேண்டிய அந்த ஷாட்டை தடுத்து நிறுத்தினார் விராட் கோலி. சிறப்பாக பீல்டிங் செய்ததால் உற்சாகம் அடைந்தார் கோலி. அப்போது தான் அந்த தவறை செய்யப் பார்த்தார்.

பந்தை எடுத்து அதில் எச்சில் தடவ முயன்றார். கிட்டத்தட்ட எச்சில் பந்தில் படும் முன் தனது செயலை உணர்ந்தார். உடனே அம்பயரை பார்த்தார். அவர் இந்த செயலைக் கண்டு பதறிய நிலையில், கோலி அதை சிரித்து சமாளித்தார். தான் எச்சில் தடவவில்லை என கையை தூக்கிக் காட்டினார்.

ALSO READ | RCB vs DC: தலைநகர் டெல்லியின் பந்துவீச்சில் சுருண்ட பெங்களூர் அணி..!

இதையடுத்து இந்தியாவின் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிரித்வி ஷாவின் அதிரடியான ஷாட்டையும், கோலியின் பீல்டிங்கையும் பாராட்டி டிவிட்டரில் “பிரித்வி ஷாவிடம் இருந்து நம்பமுடியாத ஷாட். பந்தில் எச்சிலை பயன்படுத்திய பிறகு விராட் கோலியின் மில்லியன் டாலர் ரியாக்‌ஷன்” என்று பதிவிட்டார்.

கடந்த வாரம், ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக பீல்டிங் செய்யும் போது பந்தில் எச்சிலை பயன்படுத்துவதைக் காண முடிந்தது. கோவிட் -19 தொற்றுநோயால் பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த இந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது குறிப்பிடதக்கது. 

Trending News