நயன்தாரா-வின் கோலமாவு கோகிலா இசை வெளியீடு!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா. 

Last Updated : Jul 5, 2018, 06:32 PM IST
நயன்தாரா-வின் கோலமாவு கோகிலா இசை வெளியீடு!! title=

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா. 

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து, நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது.

முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் "எதுவரையோ" என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டனர். பின்னர் இப்படத்தின் இரண்டவாது பாடலான "கல்யாண வயசு" எனும் பாடலினை கடந்த மே 17-ம் நாள் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த இருப்பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் மூன்றாவது பாடலான "ஒரே ஒரு" எனும் பாடல் கடந்த கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியாகி தற்போது வரை 1,145,999 views பெற்றுள்ளது. இந்தப் பாடலினை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இப்பாடலானது விக்னேஷ் சிவனின் 30-வது பாடல் ஆகும்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட தணிக்கைக் குழு சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் இன்று வெளியாவதாக தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், தற்போது கோலமாவு கோகிலா படத்தின் அனைத்தி ஆடியோ பாடல்களும் வெளியிட்டுள்ளனர். 

 

Trending News