வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
சமூக ஊடகங்களில் பல வித வீடியோக்கள் பகிரப்படுகின்றன. எனினும் அவற்றில் திருமண வீடியோகளுக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நாடு முழுதும் நடக்கும் திருமணங்களில் நடக்கும் பல வித வேடிக்கையான நிகழ்வுகளை இந்த வீடியோக்களின் மூலம் காண முடிகின்றது.
சமீபத்திய சமூக ஊடகங்களில் ஒரு வினொதமான திருமண வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது காண்பதற்கு மிக வித்தியாசமாக உள்ளது. இதில், மணமகன் தன்னை முழுவதுமாக ரூ.500 நோட்டுகளால் ஆன மாலையால் அலங்கரித்துக்கொண்டுள்ளார். இந்த ரூபாய் நோட்டு மாலையின் மொத்த தொகை சுமார் ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த ஆடம்பர மாலை விரைவில் இணையத்தில் வைரல் ஆனது. இது நெட்டிசன்கள் மத்தியில் பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
மடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட மாலை, மணமகன் நிறுகொண்டிருந்த முதல் தளத்திலிருந்து கீழ் தளம் வரை விரிந்து பரந்து இருந்தது. இது அந்த திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இதை இணையத்தில் கண்ட நெட்டிசன்கள் என அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இந்த காட்சிக்கு மக்கள் பலவிதமான ரியாக்ஷன்களை அளித்தனர். சிலர் மணமகனின் பண இருப்பை பார்த்து வாயில் கை வைத்தாலும் சிலர் நோட்டுகளின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகளை எழுப்பினர்.
மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், மணமகனின் ரூபாய் நோட்டு மாலை ஒரு பேசுபொருளாகியுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ரூபாய் நோட்டு மாலை, இதை பார்த்த அனைவரது மனங்களிலும் பதிந்துவிட்டது. இனி எங்கு ரூபாய் நோட்டு மாலையை பார்த்தாலும் இந்த மணமகனும் இவரது காஸ்ட்லி மாலையும் கண்டிப்பாக ஞாபகம் வரும்.
மேலும் படிக்க | நீர் அருவியை பார்த்திருக்கலாம்... நெருப்பருவியை பார்த்ததுண்டா? நெருப்பு நீர்வீழ்ச்சி
இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த மணமகன் மாலையின் வீடியோவை இங்கே காணலாம்:
வீடியோ வைரல் ஆனது
இந்த வீடியோ முதலில் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் dilshadkhan_kureshipur என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இது ஹரியானாவில் உள்ள குரேஷிபூர் கிராமத்தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இருப்பினும் சரியான இடம் உறுதி செய்யப்படவில்லை.
இந்த வீடியோவுக்கு (Viral Video) சுமார் 15 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் 3,19,000 க்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
"இந்த மாலையை அணிந்த பிறகு மாப்பிள்ளை எப்படி நடப்பார்?" ஒரு பயனர் நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு நபர், "வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று வேடிக்கையாக பரிந்துரைத்தார்.
கரன்சி நோட்டு மாலைகளை அணியும் பாரம்பரியம் இந்தியாவின் சில பகுதிகளில் உள்ளது. குறிப்பாக திருமணங்கள் மற்றும் கொண்டாட்டங்களின் போது இப்படிப்பட்ட மாலைகள் அணியப்படுகின்றன. ரூபாய் நோட்டு மாலைகள் செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன. இருப்பினும், இந்த பழக்கம் ரூபாய் நோட்டுகளை அவமரியாதை செய்யும் விதமாக உள்ளது என்றும் சிலர் கூறுவதுண்டு.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | அத குடுத்தா மொபைல் கிடைக்கும்: கராரா பேசி கரக்ட் பண்ண குரங்கு, வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ