‘அந்த’ வேலையையும் தானே பார்த்த மாப்பிள்ளை: பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Funny Wedding Video: தன் திருமணத்தில் ஒரு மாப்பிள்ளை செய்த காரியம் அனைவருக்கும் மிக கியூட்டாக தோன்றியுள்ளது. அப்படி அவர் என்ன செய்தார்?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 13, 2023, 04:14 PM IST
  • திருமண சீசனில், சமூக வலைதளங்களில் மணமகன் மற்றும் மணமகளின் பல வீடியோக்கள் காணக்கிடைக்கின்றன.
  • இவற்றில் பல விசித்திரமான விஷயங்களையும் நாம் காண்கிறோம்.
  • இன்றைய காலகட்டத்தில் திருமண வீடியோக்களை வைரலாக்குவது ட்ரெண்டாகி விட்டது.
‘அந்த’ வேலையையும் தானே பார்த்த மாப்பிள்ளை: பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோக்களுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

திருமண சீசனில், சமூக ஊடகங்களில் மணமகன் மற்றும் மணமகளின் பல வீடியோக்கள் காணக்கிடைக்கின்றன. இவற்றில் பல விசித்திரமான விஷயங்களையும் நாம் காண்கிறோம். இன்றைய காலகட்டத்தில் திருமண வீடியோக்களை வைரலாக்குவது ட்ரெண்டாகி விட்டது. மக்கள் வேண்டுமென்றே திருமணத்தில் விசித்திரமான மற்றும் வேடிக்கையான செயல்களைச் செய்கிறார்கள், பின்னர் வீடியோக்களை உருவாக்கி அவற்றை வைரலாக்குகிறார்கள். 

சில வீடியோக்களில், மணமகள் மேடையில் அமர்ந்து துப்பாக்கியால் சுடுகிறார், சில சமயங்களில் மணமகன் வித்தியாசமான நடனம் ஆடுகிறார். இப்போது இந்த பட்டியலில் மற்றொரு வீடியோவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் மாப்பிள்ளை தனது ஊர்வலத்தில் செய்துள்ள செயலைக் கண்டு அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள். 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், மாப்பிள்ளை ஊர்வலம் செல்வதையும், மாப்பிள்ளை காரில் அமர்ந்திருப்பதையும் காண முடிகின்றது. மணமகன் கையில் மைக் உள்ளது. காரில் மைக்குடன் அமர்ந்து அவர் பாடிக்கொண்டிருக்கிறார். மணமகன் மிக அழகாக ஒரு ஹிந்தி பாடலை பாடிக்கொண்டு இருக்கிறார். ஊர்வலத்தில் கலந்துகொள்ள அவரது நண்பர்களும் உறவினர்களும் மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். மணமகன் பாடலின் பாணியைப் பார்த்தால், மாப்பிள்ளை முதல் முறையாக இதுபோன்ற பாடலைப் பாடவில்லை, அவருக்கு இதில் நல்ல அனுபவம் உள்ளது என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க | ‘சீ..’: இந்த வீடியோவை பார்த்து இப்படித்தான் சொல்வீர்கள், மனிதர்களை தலைகுனிய வைக்கும் வைரல் வீடியோ

அதிசய மணமகனின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 (@kalyug_hun)

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் kalyug_hun என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலர் லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். ‘இது ஒரு பாடகரின்  திருமணம்’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘இவர் ஒரு மியூசிக் பேண்டின் முதலாளியோ!’ என தன் கருத்தை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | சீண்டிய நபரை சும்மா விடுமா குரங்கு? அடாக் செய்த குரங்கு, நொந்துபோன நபர், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News