நம்புங்க! இது அரச குடும்பத்தினரின் திருமணம் இல்லை... திருமண வீடியோ வைரல்

Luxurious Wedding video: 491 கோடி ரூபாய் செலவில் பாரிஸில் நடந்த ஆடம்பரத் திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 27, 2023, 03:20 PM IST
  • கல்யாணம் பண்ண எவ்வளவு ரூபாய் தேவை?
  • பாரிஸில் நடந்த ஆடம்பரத் திருமணம்
  • திருமண வீடியோ வைரல்
நம்புங்க! இது அரச குடும்பத்தினரின் திருமணம் இல்லை... திருமண வீடியோ வைரல் title=

வைரல் திருமணம்: இரு மனங்கள் ஒன்றிணைந்து குடும்பமாய் வாழ்வதற்கு திருமணம் செய்து கொள்வது வழக்கம் என்றால் அதற்கு விதிவிலக்குகளும் உண்டு. ஒன்றாய் வாழ சமூக அங்கீகாரம் கொடுக்கும் நிகழ்வான மணவிழா, ஒரு கொண்டாட்ட தருணமாக மாறிவிட்டது. பலர் தங்கள் திருமணங்களை தள்ளிப் போடுவதற்கான காரணமே திருமணத்திற்காக பணம் சேர்ப்பதற்காக என்பதும் கசப்பான உண்மை தான். 

மணவாழ்வை மகிழ்ச்சியாக்க பணம் ஒரு கருவி மட்டுமே என்று பலரும் சொன்னாலும், ஆடம்பரமாய் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. அதனால் தான் அரசக் குடும்பங்களின் திருமணங்கள் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒரு காலத்தில் திருமணம் என்றால், இரு வீட்டாரும் சொந்த பந்தங்கள் நண்பர்களின் உதவியுடன் திருமண ஏற்பாடுகள் செய்த நிலை தற்போது மாறிவிட்டது. அதற்கு காரணம் மாறிவரும் பணக் கலாச்சாரம் தான்.

தற்போது இணையத்தை கலக்கி வரும் ஒரு திருமண வீடியோ, அரசக் குடும்பத்தினருடையது அல்ல. ஆனால், திருமணத்தைப் பார்த்தால் ராஜ குடும்பத்தினருடையது போலவே பிரம்மாண்டமானதாக ஆடம்பரமானதாக இருக்கிறது என்பதால், இந்த வீடியோ வைரல் ஆகிறது.

மேலும் படிக்க | இது எங்க ஏரியா... ட்ராஃபிக் ஜாமை ஏற்படுத்தி கெத்து காட்டிய சிங்கங்கள்!

26 வயதான மெடலைன் ப்ரோக்வே மற்றும் ஜேக்கப் லாக்ரோன் ஜோடி, பாரிஸில் திருமணம் செய்துக் கொண்டனர். கார் டீலர்ஷிப் வைத்துள்ள தொழிலதிபரின் குடும்பத்தின் ஆடம்பர திருமண விழா அசத்துகிறது. இந்த ஜோடி பிரபலமானவர்களாக இல்லை என்றாலும், திருமண நிகழ்வின் ஆடம்பரம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆடம்பர திருமண வைரல் வீடியோ

மணமக்கள் தங்கள் திருமண நாளை மறக்க முடியாததாக மாற்ற அனைத்து வகையான தயாரிப்புகளையும் செய்கிறார்கள். இந்த திருமணம் "21ம் நூற்றாண்டின் திருமணம்" என்று குறிப்பிடப்படுகிறது.

ஒரு வாரம் நடைபெற்ற திருமணக் கொண்டாட்டங்களில் மணமக்கள் அழகாக ஆடை உடுத்தியிருந்தாலும், அவை ஆடம்பரமாகைல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இந்த வயசிலயே இப்படியா? இணையத்தை அதிர வைத்த சூப்பர் டான்சர் பாட்டி வீடியோ வைரல்

புகழ்பெற்ற வெர்சாய்ஸ் அரண்மனையை திருமணத்திற்காக வாடகைக்கு எடுத்தது, விருந்தினர்களை தனி விமானங்களில் பாரிஸுக்கு அழைத்து வந்தது, பிரபல இசைக்குழுவான மரூன் 5 இன் பிரத்யேக இசை நிகழ்ச்சி என கல்யாணம் களை கட்டியது. பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டிருந்தது திருமண நிகழ்ச்சிகள் என்றால், திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடம், அழகிய மலர்களால் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டது.

இந்த விழாவின் வீடியோக்கள் மற்றும் படங்கள் இணையத்தில் வைரலானதை கண்டு வியந்த பார்வையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான லாரன் ஜிக்மேன் தான் அதற்கு காரணம் என்று பாராட்டுக்களை அள்ளித் தெளிக்கின்றனர். 

திருமண செலவுகளைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ரொம்ப அதிகம் இல்லை, 500 கோடி ரூபாய் தான் இருக்கும் என்று மதிப்பிடுகின்றனர். சமூக ஊடகங்களில் வைரலாகிய இந்த திருமணம் நவம்பர் 18ஆம் தேதியன்று நடைபெற்றது.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News