கைப்பேசி வாங்கி தராத காதலனுக்கு 52 அறை விட்ட காதலி...

காதலர் தினத்தன்று கைப்பேசி வாங்கி தரவில்லை என தனது காதனை 52 முறை அறைந்த சீன காதலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : May 28, 2019, 02:32 PM IST
கைப்பேசி வாங்கி தராத காதலனுக்கு 52 அறை விட்ட காதலி... title=

காதலர் தினத்தன்று கைப்பேசி வாங்கி தரவில்லை என தனது காதனை 52 முறை அறைந்த சீன காதலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!

குறிப்பிட்ட சில நினைவு தினங்களில் உங்கள் காதலியை நீங்கள் மறந்துவிட்டால் அவர் என்ன செய்வார்?... சிறிது நேரத் திட்டுவார், இல்லையே கொஞ்சம் நாட்களுக்கு பேசாமல் இருப்பார். ஆனால் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலனை தொடர்ந்து 52 முறை அறைந்துள்ளார். 

இந்த சம்பவமானது கடந்த மே 20 அன்று நிகழ்ந்துள்ளது. மே 20 ஆனது சீனாவின் அதிகாரப்பூர்வ காதலர் தினம் ஆகும். காதலர் நினைவு தினமான இந்நாளில் தனது காதலன் தனக்கு கைப்பேசி வாங்கி தரவில்லையே என்ற கோவத்தில் காதலி சற்று அதிகமாகவே கோவம் கொண்டுள்ளார்...

இந்த சம்பவம் அருகில் இருந்த CCTV கேமிராவில் பதிவாகி, பின்னர் இணையத்தில் பரவி வைரலாகி விட்டது.

இச்சம்பவத்தை அடுத்து சம்பவயிடதிற்கு விரைந்த காவல்துறையின்ர இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சமாதானம் செய்ய முற்பட்டுள்ளனர். எனினும் காவல் நிலையம் சென்றால் தனது காதலிக்கு பிரச்சனை வந்துவிடும் என காதலன் காவல்நிலையம் வர மறுத்துள்ளார். பின்னர் இருவரையும் சமாதானம் செய்த காவல்துறையினர் பிரச்சனைகள் இன்றி பிறித்து அனுப்பிவைத்துள்ளனர்.

Trending News