இவர்தான் சிங்கப் பெண்ணோ? இது சீறும் சிங்கமல்ல! செல்லம் கொஞ்சும் மியாவ் lioness!

சிங்கத்தை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு செல்லும் பெண்ணின் வீடியோ வைரல்... இவர் குவைத்தின் சிங்கப் பெண்..

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2022, 01:41 PM IST
  • சிங்கத்தை தூக்கி பீடு நடைபோடும் சிங்கப்பெண்
  • செல்லம் கொஞ்சும் காட்டு ராஜா
  • புர்கா அணிந்த பெண்ணின் கையில் சிங்கம்
இவர்தான் சிங்கப் பெண்ணோ? இது சீறும் சிங்கமல்ல! செல்லம் கொஞ்சும் மியாவ் lioness! title=

அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன, அவற்றில் ஒரு சிங்கத்தின் வீடியோ வைரலாகி வருகிறது, அதைப் பார்த்தால் அதிசயமாக இருக்கிறது. 

ஆன்லைனில் பார்க்கும் அனைத்தையும் நம்ப முடியாது, குறிப்பாக ஒரு பெண் சிங்கத்துடன் தெருவில் நடந்து செல்வது போன்ற நம்பமுடியாத விஷயத்தைப் பார்த்தால் நம்ப முடியுமா? 

ஆனால், இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், சிலரால் நம்ப முடியவில்லை, வீடியோ (Viral Video) உண்மையானதுதான்.

இந்த வீடியோவில், ஹிஜாப் அணிந்த இளம் பெண் ஒருவர் சிங்கத்தை தூக்கிக்கொண்டு சாலையில் செல்கிறார். விலங்கை தூக்கிக் கொண்டு ஒரு பெண் நடந்து செல்வது, அதிலும் புர்கா அணிந்த பெண்ணின் கையில் சிங்கம் என்பது நம்ப முடியாது என்றே தோன்றுகிறது.

 இதுவரை பார்த்திராத காணொளி
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் (Social Media) கடுமையாக வைரலாகி வரும் போதிலும், காட்சிகள் தெளிவாக இல்லாததால், பலர் அதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்து சிலர் கேலியும் செய்தனர். 

இருப்பினும், காட்சிகள் அசல் போல் தெரிகிறது. தகவலின்படி, 2022ம் ஆண்டு, ஜனவரி முதல் நாளன்று, குவைத்தின் சபாஹியா மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் இருந்து இந்த வீடியோ படம் பிடிக்கப்பட்டது.

ALSO READ | மனித காதலை மிஞ்சும் மயிலின் காதல்

இந்த பெண் உண்மையிலேயே சிங்கத்தை கையில் தூக்கிச் செல்கிறாரா?

குவைத் செய்தித்தாள் அல்-அன்பாவின் கூற்றுப்படி, வீடியோவில், பெண் மற்றும் அவரது தந்தை சிங்கத்தை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். அதை கிளிப்பில் காணலாம். 

அந்த பெண்ணின் வீட்டில் இருந்து செல்ல சிங்கம் ஓடிப்போன காட்சிகள் பதிவாகியுள்ளது. ஆனால், சாலையில் சிங்கம் நடந்து செல்வதை பார்த்ததும் குடியிருப்பு பகுதி மக்கள் பீதியடைந்து ஓடத் தொடங்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளம்பெண்தான், சிங்கத்தின் உரிமையாளர் என்பதை அறிந்ததாகவும் அல் அரேபியா செய்தி நிறுவனம் கூறியது. இருப்பினும் பிடிபட்ட அந்த சிங்கம்  சிறையில் அடைக்கப்பட்டது.

ALSO READ | நடு நடுங்க வைக்கும் சம்பவம்; நாகப்பாம்பை கையில் பிடித்த சிறுமியின் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News