சிங்கத்த போட்டோ, டிவில பார்த்து இருப்பீங்க.. ஜாலியா வண்டில பார்த்து இருக்கீங்களா - சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ!

Viral Video: பின்னாடி இருந்து பார்த்தால் சிங்கம் போன்றும், முன்னாடி போய் பார்த்தால் வேறு ஒரு மிருகமும் போன்றும் உங்களை நம்ப வைக்கும் வைரல் வீடியோவை இங்கு காணுங்கள். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 13, 2023, 09:39 PM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.
  • இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்படவில்லை.
  • இந்த வீடியோவுக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
சிங்கத்த போட்டோ, டிவில பார்த்து இருப்பீங்க.. ஜாலியா வண்டில பார்த்து இருக்கீங்களா - சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ! title=

Viral Video: எப்போதும் உண்மையை விட உண்மை போல் தோற்றமளிப்பவைக்கு அதிக வரவேற்பு இருக்கும். உதாரணத்திறகு பிராண்டட் டீ-சர்டுகள், சட்டைகள் இருந்தாலும், அதே போன்று குறைந்த விலையில் இருக்கும் பொருளுக்கு மவுஸ் அதிகமாக இருக்கும். ஏனென்றால், அது மலிவான விலையிலேயே நமது எதிர்பார்ப்பையும், தேவையையும் பூர்த்தி செய்துவிடுகிறது அல்லவா, அதனால் தான்.

அதேபோல், தான் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் உண்மையை விட உண்மை போல் தோற்றமளிக்கும் ஒன்று உங்களுக்கு மகிழ்ச்சியையும், சிரிப்பையும், ஆச்சர்யத்தையும் ஒரே நேரத்தில் கொண்டு வரக்கூடும். ஆம், இந்த பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இந்த வீடியோவை பார்த்தாலும், கடைசியில் ஒரு எளிமையான விஷயமே உங்களுக்கு மகிழ்வை தரும்.  

சிங்கத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் நிறைந்திருந்தாலும், நீங்கள் பின்னால் இருந்து சிங்கம் போலும், முன் வந்து பார்த்தால் நாய் போன்றும் இருக்கும் ஒரு விலங்கைப் பார்த்திருக்க வாய்ப்பும் இல்லை, அதனை கற்பனை செய்து பார்க்கவும் உங்களால் இயலாது. 

மேலும் படிக்க | உங்ககிட்ட நாய் இருக்கா? இந்த வீடியோவ பார்த்தா கண்டிப்பா வாங்குவீங்க.. செம கியூட் வைரல் வீடியோ

ஆனால், இந்த வீடியோவில் அப்படி தான். பின்னாடி இருந்து பார்த்தால் சிங்கம் போன்றும், முன்னாடி போய் பார்த்தால் வேறு ஒரு மிருகமும் இருக்கும். அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி உங்கள் கண்களையே ஏமாற்றும் வகையில் இருக்கும்.

வைரல் வீடியோ

உண்மையில், இந்த வீடியோ சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. இந்த வீடியோ எப்போது, ​​எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை இதுவரை யாரும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், அந்த விலங்கு அமர்ந்திருக்கும் வாகனத்தின் எண்ணைப் பார்த்தால், இந்த வீடியோ இந்தியாவுக்கு வெளியே எடுக்கப்பட்ட ஒன்று என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. மேலும், அங்கு தெரியும் கடைகளின் பெயர் பலகைகளும் அப்படி நமக்கு காட்டுகின்றன.

அந்த வீடியோவை சாலையில் அந்த வழியாக சென்ற ஒருவர், ஒரு கடையை கடக்கும் போது கண்ட காட்சியை எடுத்துள்ளார்.  அதனை அவர் மொபைலில் படம் பிடித்துள்ளார். ஸ்கூட்டியில் சிங்கம் போன்ற உருவத்தில் ஒனஅறு அமர்ந்திருப்பது தெரிகிறது. முதலில் பார்க்கும் போது அவரும் இந்த விலங்கைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்.

முன்னே நகர்ந்து அந்த விலங்கின் முகத்தைப் பார்த்தவுடன், அது சிங்கம் அல்ல, வேறு ஏதோ ஒன்று அது புரிந்துகொண்டிருப்பார். உண்மையில் அது சிங்க வேஷம் அணிந்து கண்ணாடி போட்டு ஸ்டைலாக இருந்த நாய் ஆகும். இந்த வீடியோவைப் பார்த்தால், உண்மையில் இந்த நாயை பின்னால் இருந்து சிங்கமாகவே தெரிகிறது. ஆனால் நீங்கள் முன்னால் பார்க்கும்போது, ​​இந்த மிருகத்தின் ரகசியம் வெளிப்படும். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானவுடன், மக்களின் கமெண்ட்ஸ்களும் கொட்டத் தொடங்கியது. 

சிலர் இந்த வீடியோவை எடுத்தவரை பாராட்டி வருகின்றனர், மேலும் சிலர் சிங்கம் போல் கூலாக அமர்ந்திருக்கும் இந்த நாயைப் பாராட்டி வருகின்றனர். அதே சமயம், ஸ்கூட்டியில் மனிதனை உட்கார வைத்தது போல் இந்த நாயின் உரிமையாளரை சிலர் பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்தும், பார்த்ததும் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க | கீழே விழப்போன மூதாட்டிக்கு சேர் கொடுத்த செல்ல நாய் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News