நாயை காதலிக்கும் மீன்; தேடி வந்து கிஸ் அடிக்கும் வீடியோ வைரல்

நாய் ஒன்றை மீன்கள் தேடி தேடி காதலிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 22, 2022, 12:43 PM IST
நாயை காதலிக்கும் மீன்; தேடி வந்து கிஸ் அடிக்கும் வீடியோ வைரல் title=

காதலுக்கு கண்ணில்லை என்று காலங்காலமாக சொல்லப்படுவதுண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக பல காதல் சம்பவங்கள் உலகில் அரங்கேறியுள்ளன. மனிதர்களிடத்தில் மட்டுமல்ல விலங்குகளிடத்தில் கூட அப்படியான காதலை, அன்பை அரிதான நேரங்களில் பார்க்க முடியும். அவற்றை பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். மானை வேட்டையாடும், புலி பிஞ்சு குட்டியை பார்த்தால் அதனை ஒன்றும் செய்யாமல் பாதுகாத்த சம்பவங்கள் கூட காணொளியாக யூ டியூப் பக்கத்தில் இருக்கிறது. எலியும் பூனையும் எப்போதே எதிரிகள் என நினைத்துக் கொண்டிருக்கும்போது, அவை ஒன்றாக கொஞ்சி விளையாடுவதையும் பார்த்திருக்கிறோம்.

மேலும் படிக்க | முதலையுடன் மைண்ட்கேம் ஆடிய கோழி: பல்பு வாங்கிய முதலை 

அப்படியான ஒரு அரிதான மற்றும் கற்பனை செய்து பார்க்க முடியாத சம்பவம் தான் இணையத்தில் வீடியோவாக வைரலாகியிருக்கிறது.  நாயும், பூனையும் காதலிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா?. ஆம், தண்ணீருக்குள் இருக்கும் நாய்க்குட்டியை மீன்கள் தேடி வந்து முத்தம் கொடுத்து செல்கின்றன. பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும் இந்த அழகான காட்சியை யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டிருகிறார். ஏதேதோ வீடியோக்கள் எல்லாம் வைரலாகும்போது இந்த வீடியோ வைரல் ஆகாதா என்ன?. டிவிட்டரில் மட்டும் சுமார் 12 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

அந்த வீடியோ, கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும் நாய்க்குட்டி, தண்ணீருக்குள் இருக்கிறது. அங்கு குவிலயாக இருக்கும் மீன்கள், அந்த நாயை பார்த்து பயப்படாமல் அருகே வந்து முத்தமிடுகின்றன. இந்த வீடியோ எங்கு, எப்போது யாரால் எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை என்றாலும், அரிதான காட்சியை படம்பிடித்தவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | RRR 'நாட்டு கூத்து' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜப்பானிய யூடியூபர்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News